இந்தியாவில், புதிய வாகனம் வாங்கும் போது பூஜை செய்வது ஒரு வழக்கமான மரபாகும். வாகன உரிமையாளர் அதை கோவிலுக்கு எடுத்து சென்றோ, அல்லது ஒரு புரோகிதரை அழைத்து தேங்காயை உடைத்து, குங்குமம் வைத்து, மாலையிட்டு பூஜை செய்வதோ வழக்கம்.
இந்த நிலையில் புனே நகரை சேர்ந்த ஒருவர் கருப்பு நிற டெஸ்லாவை வாங்கிய நிலையில் அவர் அந்த காரை பூக்களால் அலங்கரித்திருந்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்ய, புதிய டெஸ்லா வாகன பூஜைக்காக அலங்கரிக்கப்பட்டிருப்பதை பார்த்து, தொழில்நுட்பம் முன்னேறினாலும், மரபுகள் அப்படியே நிலைத்திருக்கின்றன என கமெண்ட் குவிகிறது.
“உங்கள் டெஸ்லா கார் உங்கள் விருப்பத்திற்கு இருக்கும், ஆனால் உங்கள் அம்மா இந்திய மரபுகளை விட்டுக் கொடுக்க மாட்டார்” என்று கேலி கலந்த கமெண்ட் பதிவாகிறது. இந்த பதிவு விரைவாக வைரலாகி, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது.
இணையவாசிகள் இந்த டெஸ்லா வாகன பூஜையை பார்த்து, சிலர் கலகலப்பாகவும், சிலர் மனம்விட்டு ரசிக்கவும் செய்தனர். சிலர் இந்திய கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை பாராட்டினார்கள், இன்னும் சிலர் மலர் அலங்காரத்தை கண்டு முதலில் அதை ஒரு கார் என்பதே தங்களுக்கு ரொம்ப நேரம் தெரியவில்லை என கூறினர்.
பலரும் இதை ஒரு திருமண மேடை அல்லது பாரம்பரிய இந்திய மணமகனின் கார் என நினைத்ததாகவும், ஒரு நபர் இன்னும் அதிகமாக இந்த காருக்கு “பூக்கி சைபர்ட்ரக்” எனவும் பெயரிட்டார்.
ஒருவர் இந்திய கலாச்சாரத்தை பாராட்டி, அவர்கள் உலகின் சிறந்தவர்கள் எனக் குறிப்பிட்டார். மற்றொருவர், இந்தக் காட்சி எப்படி பண்டைய மரபுகளையும், சமகால புதிய கண்டுபிடிப்புகளையும் ஒரே நேரத்தில் இணைத்து, கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையே சமநிலை கொண்டிருக்கிறது என்பதைக் கூறினார்.