ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்துக்கு ஏற்றவாறு சேமிக்க வேண்டும் என்று பொருளாதார ஆலோசகர்கள் கூறிவரும் நிலையில், மிகவும் குறைவான வருமானம் உள்ளவர்கள் தினமும் 100 ரூபாய் சேமித்தால் கூட அவர்கள் சில குறிப்பிட்ட ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்று கூறப்படுகிறது.
மாதம் 50,000 முதல் ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் தங்களுடைய வருமானத்தில் 30 சதவீதத்தை சேமிக்க வேண்டும் என்று அறிவுரையாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், வெறும் பத்தாயிரம் அல்லது 20,000 மட்டும் வருமானம் பெறுபவர்கள் தங்களுக்கேற்றவாறு சேமித்தால், அவர்கள் கூட கோடீஸ்வரர் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
அதாவது, தினசரி 100 ரூபாய் வீதம் மாதம் 3000 ரூபாய் மட்டும் சேமித்தால், ஒரு சில குறிப்பிட்ட ஆண்டுகளில் அவர்கள் கோடீஸ்வரர் ஆகலாம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மாதம் 3000 ரூபாய் எஸ்ஐபி மூலம் சேமித்தால், அந்த சேமிப்பு ஆண்டுக்கு 10% வருமானத்தை தரும். இதனை அடுத்து, 30 ஆண்டுகாலம் காத்திருந்தால், நாம் செய்த மொத்த முதலீடு 59.22 லட்ச ரூபாய் ஆகும். ஆனால், 30 ஆண்டுகளின் இறுதியில் நமக்கு கிடைக்கும் தொகுப்பு 2.4 கோடி ரூபாய் ஆகும்.
3000 ரூபாய் சேமிக்கும் ஒருவர், தங்களுடைய வருமானம் அதிகரிக்க அதிகரிக்க கூடுதலாக சேமித்தால், அதாவது 3000 ரூபாயை அடுத்த ஆண்டு 4000, அதற்குப் பிறகு 5000 என சேமித்தால், 30 ஆண்டுகளுக்கு பதிலாக 15 ஆண்டுகளிலேயே அவருக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
எனவே, வருமானத்துக்கு ஏற்றவாறு சரியான சேமிப்பு முறையை கடைபிடித்தால், எளிய மற்றும் நடுத்தர மக்களும் கோடீஸ்வரர் ஆகிவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.