சென்னை: ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சிலிண்டர் விலை, மின் கட்டணம், தமிழ் புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களில் மாற்றங்கள் நடைபெற போகிறது. இதில் முக்கியமாக சிலிண்டர் விலை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதேநேரம் மின் கட்டணம்அடியோடு மாறுகிறது. மாதம் 1000 ரூபாய் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் கிடைக்க போகிறது.
சிலிண்டர் விலையை பொறுத்தவரை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுகிறது. உலகளாவிய கச்சா எரிபொருள் விலையின் அடிப்படையில் மாத அடிப்படையில் மாறும். வீட்டு எல்பிஜி எரிவாயு சிலிண்டர் (14.2 கிலோ) மானியத் தொகை யுடன் வழங்கப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் கடந்த 4 மாதங்களுக்கு முன் ரூ. 918க்கு விற்பனை ஆகிய நிலையில், தற்போது வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ₹818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது
கடந்த 4 மாதங்களில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.151 குறைந்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த 4 மாதங்களுக்கு முன் ₹1,960.50க்கு விற்பனையானது. ஆனால் ஒரு சிலிண்டர் விலை தற்போது ரூ.1809ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தவிலை ஆகஸ்ட் 1ம் தேதி மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. சிலிண்டர் விலை மாறும் என தெரிகிறது..
தமிழ் புதல்வன் திட்டம்: தமிழ் புதல்வன் திட்டம் மூலம் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை ஆகஸ்ட் மாதம் முதல் உள்ளது. இந்த உதவி தொகை 3.28 லட்சம் மாணவர்ளுக்கு கிடைக்க போகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்; பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசு அங்கீகரித்ததாக இருத்தல் வேண்டும் பிற மாநிலங்களில் IIT, NIT, IISER போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் பயன் பெறலாம்.
தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் பயன்பெறுவர். வருமான உச்ச வரம்பு உட்பட எந்தப் பாகுபாடும் கிடையாது. அரசு பள்ளிகளில் தமிழ் ஆங்கிலம் என இரண்டு வழிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில் பணம் கிடைக்கும்.
மின் கட்டணம்: தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் மாத இறுதியில் கணக்கெடுப்பு நடத்தும் போது, மின் கட்டணம் புதிய விகிதத்தில் செலுத்த வேண்டியதிருக்கும். 50 ரூபாய் முதல் 600 ரூபாய் கூடுதலாக இனி கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். கடந்த 2011-12 ஆம் ஆண்டில் ரூ.18,954 கோடியாக இருந்த தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பான
ரேஷன் கார்டு; தமிழ்நாடு முழுக்க புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் தொடங்கி உள்ளது. புதிதாக 2 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி ஆரம்பித்துள்ளது. தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் முதல் தினமும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.