தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது.
இதற்கு பிபார்ஜாய் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் கோவாவில் இருந்து மேற்கு தென்மேற்கு திசையில் 860 கிலோமீட்டர் தொலைவிலும் , மும்பையில் இருந்து தென்மேற்கு 970 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது மிக தீவிர புயலாக பிபார்ஜாய் வலுப்பெற்றுள்ளது எனவும், அது வடக்கு திசையில் நகர்ந்த பின்னர் வடக்கு வடமேற்கு திசையில் அதற்கு அடுத்த மூன்று நாட்களில் நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் பிபார்ஜாய் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் எனக் கூறியுள்ள வானிலை நிபுணர்கள் இந்த புயல் பாகிஸ்தான் அருகே கரையை கடக்கும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சி புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
விஜய்யின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பு ! பீதியில் அரசியல் வாதிகள்!
குமரி கடல் மன்னார்க வளைகுடா தென் தமிழக கடலோர பகுதிகள் அந்தமான் கடல் பகுதிகள் மத்திய கிழக்கு அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.