ஓடிபி வேண்டாம், QR கோட் வேண்டாம்.. ஆதார் கைரேகையில் இருந்து மோசடி.. அதிர்ச்சி தகவல்..!

Published:

பொதுவாக மோசடி செய்பவர்கள் வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து அவர்களிடம் ஒடிபி கேட்பார்கள் என்பதும் அல்லது QR கோடு மூலம் பரிவர்த்தனை செய்ய முயற்சிப்பார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஓடிபி இன்றி QR கோடு இன்றி ஆதார் அட்டையில் உள்ள கைரேகையை திருடி அதன் மூலம் மோசடி செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல யூடியூபர் புஷ்பேந்திரன் என்பவர் தனது சேனலில் தனது தாயாருக்கு நடந்த மோசடி குறித்த விவரங்களை பதிவு செய்துள்ளார். அதில் தனது தாயாரின் கட்டை விரல் கைரேகையை திருடி அதன் மூலம் அவருடைய வங்கி கணக்கில் உள்ள முழு பணத்தையும் மோசடி செய்தது அதிர்ச்சி தருகிறது. இது சாத்தியமற்றது என்று தோன்றினாலும் தனது தாயாருக்கு நடந்து உள்ளது என்றும் வங்கி அதிகாரிகளும் இது போன்ற மோசடிகள் நடந்துள்ளது என்றும் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

aadharபுஷ்பேந்திரா தனது தாயாரின் வங்கி கணக்கில் எவ்வளவு இருக்கிறது என்பதை சோதனை செய்வதற்காக வங்கி கிளைக்கு சென்றார். அப்போது அவர் தனது தாயாரின் பாஸ்புக்கில் பதிவு செய்த போது அவரது வங்கி கணக்கில் ஒரு பைசா கூட இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்த உடனடியாக அவர் தனது தாயாருக்கு போன் செய்து கேட்டபோது தான் வங்கியில் இருந்து பணம் ஏதும் எடுக்கவில்லை என்று கூறப்பட்டது.

இதனை அடுத்து தாயாரை அழைத்து வந்து வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்த போது தான் ஓடிபி மற்றும் QR  கோடு எதையும் அவரது தாயார் யாரிடமும் பகிரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து வங்கி அதிகாரி கூறியது தான் அதிர்ச்சுக்குள்ள தகவல் ஆகும். தாயாரின் ஆதார் அட்டை கைரேகையை  திருடி அதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை மோசடி செய்ததாக கூறினார். மேலும் இது முதல் முறையல்ல என்றும் ஏற்கனவே ஒரு சில முறை சில வாடிக்கையாளருக்கு இதுபோன்று நடந்துள்ளது என்றும் வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஒரு வங்கியில் பணத்தை நாம் சேமித்து வைப்பது அது பாதுகாப்பாக இருக்கும் என்பதற்காக தான். ஆனால் வங்கியில் உள்ள பணமே பாதுகாப்பாக இல்லை என்றால் பணத்தை வேறு எங்கே பாதுகாத்து வைப்பது என்ற கேள்விதான் தற்போது எழுந்துள்ளது. டெக்னாலஜி வளர வளர மோசடி செய்யும் நபர்களும் டெக்னாலஜியும் புது புது வகையில் பயன்படுத்தி மோசடி செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஆன்லைன் மற்றும் இன்டர்நெட் என்ற ஒன்று வராத போது வங்கி கணக்கில் உள்ள பணம் 100% பாதுகாப்பாக  இருந்த நிலையில் தற்போது 100 சதவீதம் பாதுகாப்பு இன்றி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உங்களுக்காக...