“நான் சொல்றது நடந்துச்சுன்னா அதுதான் வரலாறு.. விஜய்யை சீண்டுவது சொந்த செலவில் வைத்து கொள்ளும் சூனியம்.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லை..!

“விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சனம் செய்வது தவறில்லை. ஆனால், விஜய்யின் பர்சனல் விஷயங்களை, அவரது குடும்பத்தினரை, அவரது கேரக்டரை விமர்சனம் செய்தால் சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வது போன்றது. இது தி.மு.க.வுக்கு மட்டும்…

vijay vs stalin

“விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சனம் செய்வது தவறில்லை. ஆனால், விஜய்யின் பர்சனல் விஷயங்களை, அவரது குடும்பத்தினரை, அவரது கேரக்டரை விமர்சனம் செய்தால் சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வது போன்றது. இது தி.மு.க.வுக்கு மட்டும் இல்லை; தி.மு.க. கூட்டணி கட்சிகள் அனைவருக்கும் பொருந்தும்” என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க.வின் விமர்சனப் பாணி

தி.மு.க.வை பொருத்தவரை தங்களுடைய எதிரிகளை தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி, தாக்கப்பட்டவர் பதில் சொல்ல முடியாமல், கூனி குருகி போய் அரசியலை விட்டு செல்லும் அளவுக்கு தாக்குதல் இருக்கும் என்பது பரவலாக இருக்கும் குற்றச்சாட்டு. எம்.ஜி.ஆரை மலையாளி என்று திட்டியவர்கள் தான் திமுகவினர். காமராஜரையும், ராஜாஜியையும் கூட விடவில்லை. இந்திரா காந்தியை கூட மிகவும் மோசமாக விமர்சனம் செய்தவர்கள் தான் தி.மு.க.வினர். ஆரம்ப காலத்திலிருந்தே தி.மு.க.வின் வழக்கம் எதிரியை அவமானப்படுத்தும் வகையில் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவது தான் என்று பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அதேபோல் தான் தற்போது விஜய்யையும் தி.மு.க.வினர் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்க்கான மணி அளித்த ஆதரவு

இந்த நிலையில், பத்திரிகையாளர் மணி இதுகுறித்து அளித்த பேட்டியில், “விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளை விமர்சனம் செய்வது தவறில்லை. அரசியல் ரீதியான விமர்சனம் வேறு. ஆனால், விஜய்யை தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தினால் அது தாக்கியவர்களுக்கு தான் எதிர்வினையாக மாறும். அது சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வது போன்று” என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

“விஜய் மூன்று நிமிடம் மட்டுமே பேசினார் என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த மணி, ஒருவர் ஏன் குறைவாக பேசினார் அல்லது ஏன் அதிகமாக பேசினார் என்ற கேள்வி தவறு. என்ன பேசினார் என்பதைத்தான் பார்க்க வேண்டும். ‘இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா’ என்று மக்களை ஏங்க வைப்பதுதான் ஒரு பேச்சாளருக்கு அழகு. ‘இவர் பேச்சை எப்போது முடிப்பார்’ என்று கூறும் அளவுக்கு பேசக்கூடாது” என்று தெரிவித்தார். “எப்போது முடிப்பாய் என மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டால் அங்கிருந்து உன்னுடைய தோல்வி ஆரம்பமாகிவிடும்” என்று தெரிவித்தார்.

விஜய்யின் அரசியல் வருகை மற்றும் சவால்கள்

“விஜய் வரும் தேர்தலில் வெற்றி அடைகிறாரோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக தி.மு.க.வின் வெற்றியை தடுப்பார். தி.மு.க.வுக்கு நல்ல சவாலாக இருப்பார். அந்த விஜய்யை பற்றி ஏன் இவ்வளவு பயம் என்று தான் எனக்குத் தெரியவில்லை. பர்சனலாக விஜய்யை பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தது மாதிரி விஜய்யை விமர்சனம் செய்தால் தேவையில்லாத பிரச்சனைதான் ஏற்படும்” என்று தெரிவித்தார்.

“விஜய்யை ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று விமர்சனம் செய்கிறார்கள். ஒருவேளை அவர் ஆர்.எஸ்.எஸ். காரராக இருக்கட்டும். அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டாமா? அந்த பதிலை சொல்ல துப்பில்லை தானே?” என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக புதிதாக ஒருவர் கட்சி ஆரம்பித்துவிட்டால் உடனே “இவர் பா.ஜ.க.வின் பினாமி, ஆர்.எஸ்.எஸ். இன் கைக்கூலி” என்றுதான் தி.மு.க.வினர் விமர்சனம் செய்து வருவார்கள். ஆரம்பத்தில் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தபோது கூட அவர் பா.ஜ.க.வின் பினாமி என்றுதான் கூறினார்கள். அதன் பிறகு கமலஹாசனை சரிசெய்து தங்களுடைய கூட்டணியில் எடுத்துக் கொண்டார்கள். இப்போது புதிதாக விஜய் வந்திருக்கும் நிலையில், அவரையும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பினாமி என்றுதான் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

“பாஜகவுடன் ஓட்டும் இல்லை, உறவும் இல்லை, எந்த காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை” என்று தெளிவாக விஜய் கூறிய போதிலும், “விஜய், பா.ஜ.க.வின் பினாமி” என விமர்சனம் செய்வது தேவையற்றது என்றும் கூறப்பட்டு வருகிறது. “அப்படியே அவர் ஆர்.எஸ்.எஸ் காரராக இருந்தாலும் அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? நீங்கள் உங்கள் ஆட்சியை நல்லபடியாக நடத்திக் கொண்டிருந்தால், மக்களின் வெறுப்பை சம்பாதிக்காமல் இருந்தால், யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலை இல்லை தானே? ஆட்சியில் தவறு இருப்பதால் தான் இப்போது புதிதாக வரும் ஒரு தலைவரை பார்த்து பயம் ஏற்பட்டது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

மொத்தத்தில் தமிழகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று விஜய் சொல்லி வருகிறார். “நான் சொல்றது நடந்துச்சுன்னா அதுதான் வரலாறு” என்ற பன்ச் டயலாக்கிற்கு ஏற்ப விஜய் சொல்வது நடந்துவிட்டால், கண்டிப்பாக தமிழக அரசியலில் அது ஒரு புதிய வரலாறாகத்தான் இருக்கும்.