மாதம் ரூ.1.50 லட்சம் சம்பாதிக்கும் தம்பதி.. சொந்த வீடு வாங்க முடியாமல் திணறல்..!

By Bala Siva

Published:

 

மாதம் 1.5 லட்சம் பிசியோதெரபி தம்பதியினர் பல ஆண்டுகளாக சம்பாதித்தும் சென்னையில் சொந்த வீடு வாங்க முடியாமல் தவித்து வருவதாக எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக இருந்தாலும், சம்பாதிக்கும் திறன், சேமிக்கும் திறன் மற்றும் விலைவாசி ஆகியவை காரணமாக சொந்த வீடு வாங்க முடியாமல் பலர் திணறி வருகின்றனர். ஒரு சிலர் தவணை முறையில் சொந்த வீடு வாங்கினாலும், அந்த தவணையை கட்ட வேண்டும் என்பதற்காகவே ஓடி ஓடி உழைத்து வருகின்றனர் என்பதும் இதனால் குடும்பத்தினரிடம் சந்தோசமாக இருக்கும் நேரம் குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் இருவரும் சேர்ந்து ஒன்றரை லட்ச ரூபாய் சம்பாதிப்பதாகவும், அரை மணி நேரத்திற்கு அவர்கள் பிசியோதெரபிக்காக 500 ரூபாய் வாங்கினாலும், இதுவரை ஒரு சொந்த வீடு வாங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

கிளினிக் மற்றும் வீடு வாடகை, வரிகள், எலக்ட்ரிசிட்டி பில் மற்றும் இஎம்ஐ ஆகியவை காரணமாகவே தங்களால் பெரிய அளவில் சேமிக்க முடியவில்லை என்றும், அதனால் சொந்த வீடு வாங்குவது இன்னும் கனவாகவே இருக்கிறது என்றும் அவர்கள் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

தங்களுடைய இரண்டு குழந்தைகளின் படிப்பு மற்றும் வீட்டு செலவு ஆகியவை ஒன்றரை லட்சம் சம்பாதித்தாலும், சரியாக போய்விடுகிறது என்றும், வீடு வாங்குவது என்பது கனவாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சென்னையை பொருத்தவரை, சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகும் என்ற நிலையில், மிடில் கிளாஸ் வகுப்பினருக்கு சொந்த வீடு என்பது கடைசி வரை கனவாகவே இருந்து வருகிறது.

Tags: chennai, house, loan