அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது, சுல்தானே… வெறும் 99 பைசாவுக்கு 21.31 ஏக்கர் நிலம்.. அள்ளி கொடுத்த மாநில அரசு.. ரூ.1,582 கோடி செய்யும் Cognizant..

  ஆந்திரப் பிரதேச அரசு, காப்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு வெறும் 99 பைசாவுக்கு நிலம் வழங்கியிருக்கிறது. இதை தொடர்ந்து, அந்த நிறுவனம் விசாகப்பட்டினத்தில் ஒரு பிரம்மாண்டமான தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்க ரூ.1,582…

cognizant

 

ஆந்திரப் பிரதேச அரசு, காப்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு வெறும் 99 பைசாவுக்கு நிலம் வழங்கியிருக்கிறது. இதை தொடர்ந்து, அந்த நிறுவனம் விசாகப்பட்டினத்தில் ஒரு பிரம்மாண்டமான தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்க ரூ.1,582 கோடி முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மிகப்பெரிய முதலீடு அடுத்த எட்டு ஆண்டுகளில் சுமார் 8,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

“காப்னிசென்ட் நிறுவனம், விசாகப்பட்டினம் பெருநகர பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இருக்கும் கப்புலுப்பாடா பகுதியில் 21.31 ஏக்கர் நிலத்தை கோரியது. மாநில அரசு இந்த நிலத்தை வெறும் 99 பைசா என்ற அடையாள விலையில் ஒதுக்கும்,” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாகப்பட்டினம் ஒரு வளரும் தகவல் தொழில்நுட்ப மையமாக உருவெடுக்க தீவிரமாக முயற்சிக்கும் நிலையில், இந்த முதலீடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பலமுறை விசாகப்பட்டினத்தை ஆந்திராவின் பொருளாதார தலைநகராக மாற்ற வேண்டும் என்ற தனது தொலைநோக்கு பார்வையை பகிர்ந்து கொண்டுள்ளார்.

காப்னிசென்ட் நிறுவனம், வரும் 2029 மார்ச் மாதத்திற்குள் தங்கள் வணிக நடவடிக்கைகளை தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம், ஆந்திராவின் தகவல் தொழில்நுட்ப மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் நாரா லோகேஷ், காப்னிசென்ட் நிறுவனம் மாநிலத்தில் தங்கள் செயல்பாடுகளை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து குறிப்பிட்டிருந்தார். உலக பொருளாதார மன்றத்திற்காக தாவோஸ் சென்றிருந்தபோது, லோகேஷ், காப்னிசென்ட் தலைமை நிர்வாக அதிகாரி எஸ். ரவி குமாரை சந்தித்து, விசாகப்பட்டினம் போன்ற பெரிய நகரங்களில் தங்கள் செயல்பாடுகளை தொடங்க பரிசீலிக்குமாறு வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.