வந்தே பாரத் ரயிலில் கொடுத்த உணவில் கரப்பான் பூச்சி.. 80 வயது மூத்த குடிமகன் அதிர்ச்சி..!

By Bala Siva

Published:

வந்தே பாரத ரயிலில் பயணம் செய்த 80 வயது மூத்த குடிமகன் பயணிக்கு கொடுத்த உணவில் கரப்பான் பூச்சி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தனது குடும்பத்துடன் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில் அந்த பயணத்தின் போது ரயில் நிர்வாகம் கொடுத்த உணவில் கரப்பான் பூச்சி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த தொழிலதிபர் தனது சமூக வலைத்தளத்தில் எனது 80 வயது தந்தைக்கு கொடுத்த உணவில் கரப்பான் பூச்சி இருந்தது என்றும் அதை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார் என்றும் நாங்கள் இது குறித்து புகார் செய்ய சென்றபோது குப்பைத்தொட்டி அருகிலேயே சமைத்துக் கொண்டிருந்தார்கள் என்றும் அங்கு நிறைய கரப்பான் பூச்சி இருந்ததை பார்த்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அது மட்டும் வந்தே பாரத் ரயிலில் கொடுத்த தயிர் மிகவும் புளிப்பாக இருந்தது என்றும் கெட்டுப் போயிருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் ரயில்வே நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

கரப்பான் பூச்சி இருக்கும் உணவை பார்த்ததும் எனது தந்தை மிகவும் மன கவலை அடைந்தார் என்றும் ஆடம்பரமான ரயில் என்று கூறப்படும் வந்தே பாரத் ரயிலில் இது போன்ற உணவுகள் கொடுப்பதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கரப்பான் பூச்சி உயிரோடு இருந்தது தான் மிகவும் கொடுமை என்றும் அவர் கூறியிருக்கும் நிலையில் நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.