கேர்ள் பிரண்டுக்கு ஐபோன் வாங்க 9ஆம் வகுப்பு மாணவன் செய்த செயல்.. அம்மா அதிர்ச்சி..!

டெல்லியில் 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் தனது அம்மாவின் நகையை திருடி அதை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து ஐபோன் ஒன்றை வாங்கி தனது கேர்ள் பிரண்டுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ள…

iPhone

டெல்லியில் 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் தனது அம்மாவின் நகையை திருடி அதை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து ஐபோன் ஒன்றை வாங்கி தனது கேர்ள் பிரண்டுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பள்ளியில் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவர் தனது கேர்ள் பிரண்ட் பிறந்தநாள் அன்று வித்தியாசமான பரிசு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். ஆனால் அவரிடம் காசு இல்லை என்பதனை அடுத்து தனது அம்மாவின் நகையை அவர் திருடியதாக தெரிகிறது. அந்த பணத்தை நகையை கடையில் கொடுத்து அதில் கிடைத்த 50 ஆயிரம் ரூபாயை தனது கேர்ள் பிரண்டுக்கு ஐபோன் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் நகையை காணவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் அம்மா இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் விசாரணையில் தான் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தான் 9ஆம் வகுப்பு மாணவன் நகைக்கடையில் நகையை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனை அடுத்து போலீசார் மாணவனிடம் விசாரணை செய்தபோது தனது கேர்ள் பிரண்டுக்கு ஐபோன் வாங்கி கொடுப்பதற்காக நகையை திருடியதாகவும் அதை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்று விட்டதாகவும் கூறியுள்ளார். தனது தேவைக்கு கூட தனது அம்மா பணம் கொடுப்பதில்லை என்றும் அதனால் கேர்ள் பிரண்டுக்கு பிறந்தநாள் பரிசு வாங்க பணம் கேட்டால் அவர் கொடுக்க மாட்டார் என்பதால் தான் நகையை திருடியதாகவும் காவல்துறையில் அந்த மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் அம்மா தனது புகாரை வாபஸ் பெற்றதோடு தனது மகனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவனிடம் இருந்து நகையை வாங்கிய நபரிடம் காவல்துறையினர் தற்போது விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.