முதல்முறையாக பெற்றோரை வேலைக்கு அமர்த்திய சீனா..  3 லட்ச ரூபாய் சம்பளம் ..!

By Bala Siva

Published:

ஒரு குழந்தைக்கு தாய் மற்றும் தந்தை செய்ய வேண்டிய பணிகளை செய்வதற்காக பெற்றோர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதாகவும் இதற்கு மூன்று லட்ச ரூபாய் வரை சம்பளம் கிடைப்பதாகவும் சீனாவில் கூறப்படுகிறது.

ஒரு தாய், தந்தை தங்களது குழந்தைக்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது, நல்ல ஒழுக்கங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுப்பது, விளையாட்டில் ஆர்வம் காட்டுவது, நீதி கதைகள் கூறுவது, நேரத்திற்கு சாப்பாடு கொடுப்பது என்பது அன்றாட கடமையாக உள்ளது.

இந்த நிலையில் சீனாவில் குழந்தைகளின் பெற்றோர்கள் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கு வேலைக்காரர்கள் மட்டுமே இதுவரை பணி நியமனம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது ஒரு பெற்றோர்கள் செய்யும் வேலையை செய்ய வேண்டும் என பெற்றோர்களே பணிக்கு அமர்த்தப்படுவதாகவும் அவர்களுடைய பணி காலையிலிருந்து இரவு வரை குழந்தைகளுக்கு தேவையானதை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்றும் கூறப்படுகிறது.

ஒரு குழந்தையின் அருகில் தாய் தந்தை இருந்தால் என்னென்ன செய்வார்களோ அதை அத்தனையும் நியமனம் செய்யப்படும் தம்பதிகள் செய்ய வேண்டும் என்றும் அதற்காக மூன்று லட்ச ரூபாய் சம்பளம் தருவதாகவும் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

குழந்தைகளின் ஒரிஜினல் பெற்றோர் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் நிலையில் பணி நியமனம் செய்யும் பெற்றோர்கள் முழுக்க முழுக்க குழந்தைகளை பார்த்துக் கொள்வார்கள் என்பது புதிய கலாச்சாரமாக உள்ளது என்று இந்த விளம்பரத்துக்கு கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

Tags: china, parents, Salary