ஆன்லைனில் வெளிவந்த மார்பக அறுவை சிகிச்சை வீடியோ.. மருத்துவமனை மீது இளம்பெண் வழக்கு..!

Published:

சீனாவில் இளம்பெண் ஒருவர் சமீபத்தில் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் அவரது அறுவை சிகிச்சை குறித்த வீடியோ ஆன்லைனில் வெளிவந்துள்ளதை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

சீனாவை சேர்ந்த கோவா என்ற இளம் பெண் சமீபத்தில் பிரபலமான மருத்துவமனை ஒன்றில் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின் சில நாட்களில் சமூக வலைதளங்களில் தனது அறுவை சிகிச்சை குறித்த வீடியோ வெளியானதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் மருத்துவமனை நிர்வாகத்தில் விளக்கம் கேட்டபோது மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பேற்ற பதிலைக் கூறியதாக தெரிகிறது. வீடியோ எடுத்த நபர் யார் என்று தங்களுக்கு தெரியாது என்றும் அந்த நபரை வேலையில் விட்டு நீக்கி விட்டோம் என்றும் இதற்கு மருத்துவமனை பொறுப்பேற்க முடியாது என்றும் பதில் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த இந்த இளம் பெண் சீன நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் மருத்துவமனை என்பது ஒரு தனிப்பட்ட அமைப்பு என்பதால் அங்கு அறுவை சிகிச்சை அறையில் இருந்த டாக்டர்கள் நர்சுகள் தவற வேற யாரும் இந்த வீடியோவை எடுத்திருக்க முடியாது என்றும் ஆனால் மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பற்ற பதிலை கூறுவதால் தனக்கு நஷ்ட ஈடு வாங்கி தரவேண்டும் என்றும் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்து வரும் பொதுமக்கள் பலரும் மருத்துவமனை நிர்வாகத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். வீடியோ எடுத்தவர் வேலையை விட்டு சென்றுவிட்டால் எந்த நிறுவனமும் அதை ஒரு சாக்காக பயன்படுத்தி தட்டிக்கழிக்க கூடாது என்றும் மருத்துவமனையில் நடைபெறும் அனைத்து தவறுகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...