சென்னை எப்போவுமே திமுக கோட்டை இல்ல… அது மக்களோட பேட்டை! இந்த முறை ராயபுரம் முதல் மயிலாப்பூர் வரை வீசப்போறது அதிமுகவின் சூறாவளி!

சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய மண்டலவாரியான கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக சென்னை மண்டலத்தில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. பல ஆண்டுகளாக திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக கருதப்படும்…

dmk admk

சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய மண்டலவாரியான கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக சென்னை மண்டலத்தில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. பல ஆண்டுகளாக திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக கருதப்படும் சென்னை மண்டலத்தின் 16 தொகுதிகளில், இந்த முறை அதிமுக கூட்டணி ஒரு வலுவான முன்னிலையை பெறும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. சென்னை மாநகரம் திமுக கோட்டையாக இருந்தாலும், 2011 தேர்தலில் திமுகவுக்கு கிடைத்த ஆதரவு இப்போது கிடைக்க வாய்ப்பில்லை என்றே சர்வே முடிவுகள் கூறுகின்றன.

சென்னை மண்டலத்தின் 16 தொகுதிகளான வேளச்சேரி, எழும்பூர், ஆர்.கே நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர் மற்றும் மயிலாப்பூர் ஆகியவற்றில் கள நிலவரம் முற்றிலும் மாறி வருகிறது. இதில் குறைந்தது எட்டு தொகுதிகளுக்கு மேல் அதிமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, தியாகராய நகர் தொகுதியில் கடந்த முறை வெறும் 132 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அதிமுகவின் சத்தியா, இந்த முறை மக்களின் அதிருப்தி மற்றும் தனது தனிப்பட்ட செல்வாக்கினால் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது.

ராயபுரம் தொகுதியில் நிலவும் சூழல் மிகவும் சுவாரஸ்யமானது. அங்கு ‘மண்ணின் மைந்தராக’ கருதப்படும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், மீனவ சமுதாய மக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுடனும் நெருக்கமான தொடர்பில் இருக்கிறார். சிட்டிங் எம்எல்ஏ ஐட்ரீம்ஸ் மூர்த்தி தொகுதி பக்கமே வருவதில்லை என்ற புகாருக்கு மத்தியில், ஒரு புதிய இஸ்லாமிய வேட்பாளரை திமுக இறக்கியிருப்பது ஜெயகுமாருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. மேலும், திரு.வி.க நகர் தொகுதியில் மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் களம் காண்பது திமுகவின் வெற்றி வாய்ப்பை கடுமையாக பாதிக்கும். ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பிறகு அவருக்கு ஆதரவாக திமுக தரப்பிலிருந்து குரல்கள் எழாதது அங்குள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் வட இந்திய சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாப்பூர் தொகுதியைப் பொறுத்தவரை, தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவது அந்த தொகுதிக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்துள்ளதுடன், அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது. சைதாப்பேட்டையில் செந்தமிழன் மற்றும் வேளச்சேரியில் அசோக் போன்ற அதிமுக நிர்வாகிகள் கடந்த சில ஆண்டுகளாக தொகுதியில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அதே நேரத்தில், விஜய் என்ற காரணி ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பிரித்தாலும், அது அதிமுகவை விட திமுகவிற்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

டிஜிட்டல் பிரச்சாரங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களுக்கு ஒரு சாதகமான பிம்பத்தை திமுக கட்டமைத்திருந்தாலும், கள எதார்த்தம் அதற்கு நேர்மாறாக இருக்கிறது. குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் சிட்டிங் எம்எல்ஏக்கள் மீதான அதிருப்தி மற்றும் ‘மாற்றத்தை’ விரும்பும் மனநிலை அதிகரித்துள்ளது. மத்திய சென்னை மற்றும் தென் சென்னையின் பல பகுதிகளில் அதிமுக கூட்டணியின் “எட்ஜ்” அதிகமாக இருப்பதால், இந்த முறை சென்னையை தனது கோட்டை என்று திமுக தம்பட்டம் அடிக்க முடியாது என்றே இந்த மண்டலவாரியான கருத்துக்கணிப்புகள் உணர்த்துகின்றன. மொத்தத்தில், இந்த தேர்தல் முடிவுகள் சென்னை மண்டலத்தில் திமுகவின் பலத்தை உடைத்து, அதிமுகவின் மீள் எழுச்சிக்கு ஒரு சான்றாக அமைய வாய்ப்புள்ளது.