AI டெக்னாலஜி வளர்ச்சிக்கு ஐடியா சொன்னால் ரூ.8.26 கோடி பரிசு.. ChatGPT அறிவிப்பு..!

By Bala Siva

Published:

AI என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ChatGPT,  AI டெக்னாலஜி வளர்ச்சி குறித்து சிறந்த ஐடியாக்களை கூறுபவர்களுக்கு 8.26 கோடி பரிசளிக்கப்படும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

AI டெக்னாலஜியை எப்படி நிர்வகிக்கலாம்? எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம்? என்பது போன்ற ஐடியாக்களை தெரிவிக்கும் குழுக்களுக்கும் இந்த பரிசு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது AI என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த தொழில்நுட்பத்தால் கடினமாக செய்யக்கூடிய வேலைகள் கூட மிகவும் எளிதாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முக்கிய நிறுவனமான ChatGPT, இந்த தொழில்நுட்பத்தை மேலும் வளர்ச்சி அடைய பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. அந்த AI தொழில்நுட்பத்தை எவ்வாறு மாற்றி அமைக்கலாம்? எந்தெந்த வகையில் வளர்ச்சிக்கு உரியதாக மாற்றலாம் என்று ஐடியா கொடுப்பவர்களுக்கு ரூ.8.26 கோடி பரிசு வழங்கப்படுகிறது

OpenAI ஆனது உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பிற நிபுணர்களின் குழுக்களிடம் இருந்து ஐடியாக்களை வரவழைக்கிறது. சிறந்த ஐடியாக்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 15, 2023 ஆகும்.