இந்தியர்களின் சருமத்துக்கு சன் ஸ்கிரீன் அவசியம் இல்லையா???

Published:

நம் உடலுக்கு தேவையான விட்டமின் டி சூரியனிடமிருந்து மட்டுமே நாம் பெற்றுக் கொள்ள இயலும். சூரிய ஒளி நம் உடலுக்கு எந்த அளவு நன்மை செய்கிறதோ அதே அளவுக்கு அதிலிருந்து வெளியேறும் புறஊதா கதிர்கள் நமது சருமத்தை வெகுவாக பாதிக்கும். எனவே பல மருத்துவ நிபுணர்களின் பரிந்துரை தான் இந்த சன் ஸ்கிரீன்.

sun

சன் ஸ்கிரீன் என்பது சூரிய ஒளியால் முகம் கருமை அடைவதை மட்டும் தடுப்பதல்ல சூரிய கதிர்களால் முகத்தில் உண்டாகும் முதிர்ச்சியையும், தோல் சுருக்கத்தையும், யுவிஏ மற்றும் யுவிபி கதிர்களால் தோல் புற்றுநோய் ஏற்படுவதில் இருந்தும் நம் தோலை காக்கும் என்கிறார்கள்.

கோடை காலத்திலும் அதிகளவு வெயிலில் செல்லும்போதும் மட்டும்தான் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வீட்டில் இருக்கும் பொழுதும் மேகமூட்டமான நாட்களிலும் கூட நாம் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை நமது அன்றாட வழக்கமாக்கிக் கொள்வது நமது சருமத்துக்கு நல்லது என்பது பல நிபுணர்களின் கருத்து.

sunny day

ஆனாலும் சில மருத்துவ நிபுணர்கள் இந்தியர்களின் சருமத்தில் இயற்கையிலேயே மெலனின் அதிகம் இருக்கிறது. இந்த மெலனின் சூரிய ஒளியிலிருந்து நம்மை பாதுகாக்கும். நமது சருமத்தை தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து காப்பதற்கு இந்தியர்களுக்கு இயற்கை அளித்த வரம் இந்த மெலனின். எனவே இந்தியர்கள் சன் ஸ்கிரீன் பயன்படுத்த தேவையில்லை என்று கூறிவருகின்றனர்.

இப்படி இரு தரப்பினர் கூறி வருகையில்… பெரும்பான்மையினரின் கருத்துப்படி நாம் சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாம் என்று முடிவெடுத்துவிட்டால் எப்படி சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது என்பது அடுத்த கேள்வி.

sun screen

  1. நாம் தேர்ந்தெடுக்கும் சன் ஸ்கிரீன் நம்மை சூரிய ஒளியின் இரு புற ஊதா கதிர்களில் இருந்தும் காக்கும் தன்மை உடையதாக இருக்க வேண்டும்.
  2. SPF ( SUN PROTECTION FACTOR) என்று சொல்லக்கூடிய சூரிய பாதுகாப்பு காரணி குறைந்தபட்சம் 30 உடையதாக இருக்க வேண்டும்.
  3. தண்ணீர் மற்றும் வியர்வையை குறைந்தபட்சம் 40 முதல் 80 நிமிடங்கள் வரையாவது தாங்கக்கூடிய வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளதாக இருந்தால் நல்லது.

மேலும் உங்களுக்காக...