உலகின் முன்னணி AI டெக்னாலஜியான OpenAI நிறுவனம் தற்போது மேம்பட்ட AI மொழி மாதிரியாக GPT-4.5 என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ChatGPT Pro பயனர்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
DeepSeek-R1 போன்ற போட்டி மாடல்கள் உருவாகி வரும் சூழலில், OpenAI தனது ChatGPTஐ புதுமையுடன் வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுகுறித்து
OpenAI தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் கூறியபோது, GPT-4.5 புதிய மாடல் வெளியீடு ஒரு சிந்தனைமிக்க மனிதர்பேசுவது போன்ற அனுபவத்தை வழங்கும் என கூறினார்.
மேலும் GPT-4.5 முற்றிலும் புதிய வகையான ஒரு புத்திசாலித்தனமான மாடல் என்றும் இதில் ஒரு தனித்துவமான மந்திரம் உள்ளது, என்றும், இதுதரும் ரிசல்ட்டை நான் இதற்கு முன்பு உணரவில்லை,” என்றும் அவர் கூறினார்.
OpenAI வெளியிட்டுள்ள தகவலின்படி, GPT-4.5 ஒரு இயல்பான மற்றும் எளிதான பயனர் அனுபவத்தை வழங்குவதாகவும், ஒரு விரிவான இண்டலிஜென்ஸ் டேட்டாவை கொண்டுள்ளது என்றும் தெரிகிறது.
அதிக எமோஷனல் அறிவாற்றல் கொண்டு சிறப்பாக செயல்படும் இந்த GPT-4.5 தவறான அல்லது பொருளற்ற தகவல்களை உருவாக்கும் பிரச்சனை குறைவாக உள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.
மேலும் GPT-4.5 புதிய கண்காணிப்பு நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள என்பதால் இவை பாரம்பரிய முறைகளான supervised fine-tuning மற்றும் reinforcement learning from human feedback (RLHF) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் உணர்வுப்பூர்வமான தகவல் பரிமாற்றத்திற்கும் ஏற்ற மாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது, GPT-4.5 ChatGPT Pro பயனர்களும் டெவலப்பர்களும் அணுகக்கூடியதாக உள்ளது. அடுத்த வாரத்தில், Plus மற்றும் Team பயனர்களுக்கு இது வழங்கப்படும். அதன் பிறகு, Enterprise மற்றும் Education பயனர்களுக்கும் இது விரிவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.