பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் வேலை செய்த ஊழியர் ஒருவருக்கு ஒரு வருடமாக சம்பளம் தரவில்லை என்றும் அது மட்டும் என்று வேலையில் இருந்தும் அவர் நீக்கப்பட்ட நிலையில் அவர் தனது சிஇஓவின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை திருடிவிட்டதாக குற்றம் காட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரை மையமாகக் கொண்ட ஒரு முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனம் சமீபத்தில் சில ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது. லாபத்தை அதிகரிப்பதற்காகவும் செலவுகளை குறைப்பதற்காகவும் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில் ஊழியர்களுக்கான சம்பளத்தை ஒரு வருடமாக தரவில்லை என்று ஊழியர்கள் மத்தியில் குற்றம் தாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேலை இழந்த ஊழியர் ஒருவர் சிஇஓவின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை திருடிவிட்டதாக கூறப்படும் நிலையில் அந்த சிஇஓ புதிய பாஸ்போர்ட் பெற்று விட்டாலும் அமெரிக்கா செல்வதற்கான விசாவை மீண்டும் பெற முடியவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் ஒரு வருடம் ஆக சம்பளம் தரவில்லை என்ற குற்றச்சாட்டு நிறுவனத்தின் நன் மதிப்பை கெடுக்கும் பொய்யான குற்றச்சாட்டு என்று கூறிய சிஇஓ, தனது பாஸ்போர்ட் விசாவை திருடிய ஊழியர் தன்னிடம் வந்து மீண்டும் அதனை ஒப்படைக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் பெயர் சொல்ல விரும்பாத ஊழியர் ஒருவர் இதுகுறித்து கூறிய போது ’எந்தவித காரணம் இன்றி ஊழியர்களை வேலை நீக்கம் செய்து விட்டார்கள், அது கூட பரவாயில்லை ஒரு வருடத்திற்கு மேலாக சம்பளம் தரவில்லை என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.