சென்ட்ரல், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் மழைநீர்.. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!

  கனமழை காரணமாக சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதை அடுத்து ரயில்கள் புறப்படும் இடம் மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்க கடலில் தோன்றிய…

central

 

கனமழை காரணமாக சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதை அடுத்து ரயில்கள் புறப்படும் இடம் மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவிப்புகளையும் அரசு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனை அடுத்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, திருவள்ளுவர், திருத்தணி, அரக்கோணம் செல்லும் ரயில்கள், சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்புவதற்கு பதிலாக ஆவடி ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரயில் பயணிகள் ஆவடி ரயில் நிலையத்தில் அதிக அளவில் குவிந்து உள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.