சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம்; முழு விவரம் இதோ!

By Amaravathi

Published:

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்குகிறது.

இன்று தொடங்க உள்ள சிபிஎஸ்இ வாரியத் தேர்வில் சுமார் 38 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு எழுதவுள்ளனர். தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 7200க்கும் மேற்பட்ட மையங்களிலும், உலகம் முழுவதும் 26 நாடுகளிலும் வாரியத் தேர்வுகள் நடைபெறும்.

10ஆம் வகுப்புத் தேர்வுகள் 76 பாடங்களுக்கு 16 நாட்களில் நடத்தப்பட்டு மார்ச் 21ஆம் தேதியுடன் முடிவடையும். 12ஆம் வகுப்புக்கான 115 பாடத் தேர்வுகள் 36 நாட்களில் நடைபெற்று ஏப்ரல் 5ஆம் தேதி நிறைவடையும்.

மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், அனைத்து பாடங்களுக்கிடையே போதிய நாட்கள் இடைவெளி வழங்கப்பட்டிருப்பதாக சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது

மேலும் உங்களுக்காக...