காரின் டிக்கியில் தொங்கிய மனித கை.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்.. இப்படியெல்லாம் செய்வார்களா?

  லேப்டாப் விற்பனையை அதிகரிக்க ஒரு Prank  வீடியோ எடுத்த நிலையில் இந்த வீடியோ நவி மும்பையில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஒரு காரின்…

car

 

லேப்டாப் விற்பனையை அதிகரிக்க ஒரு Prank  வீடியோ எடுத்த நிலையில் இந்த வீடியோ நவி மும்பையில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஒரு காரின் டிக்கியில் மனித கையின் ஒன்று தொங்கும் காட்சி இருந்தது. இது சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

வாஷியில் என்ற பகுதியில் படம் பிடிக்கப்பட்ட அந்த வீடியோவில், ஒரு உயிரற்ற மனிதக் கை போல காணப்படும் ஒன்று காரின் பின் பகுதியில் தொங்குகிறது. அந்த காரை பின் தொடர்ந்து வந்த ஒருவர் அதிர்ச்சி அடைந்து அதை வீடியோ எடுத்தார்.

இந்த வீடியோ போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தவுடன், நவி மும்பை போலீசாரும் குற்றப்பிரிவு அணியும் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். காரின் பதிவு எண் மூலம், அவர்கள் 2 மணி நேரத்தில் அந்த வாகனத்தை  கண்டுபிடித்தனர்.

ஆனால் அதிர்ச்சியாக, அந்த கை ஒரு  prank என்பதும், அது ஒரு லேப்டாப் கடையின் விளம்பர வீடியோவாகும் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, காரின் ஓட்டுநர் உட்பட மூன்று பேரும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்.

போலீசார் தெரிவித்ததின்படி, அந்த மூவரில் ஒருவர் நவி மும்பையின் கோபர்கேர் பகுதியில் லேப்டாப் கடை வைத்துள்ளார். தனது கடையின் வியாபாரத்தை அதிகரிக்க அவர் தனது நண்பர்களுடன்  இந்த prank வீடியோவை எடுக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த செயல் விளம்பரத்துடன் எப்படி தொடர்பு என்பது குறித்து போலீசார் தெளிவாக விளக்கவில்லை.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நால்வர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 18ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நவிமும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

https://x.com/News18lokmat/status/1912051675235246409