AI டெக்னாலஜியால் 30 கோடி பேர் வேலையிழப்பார்களா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Published:

AI டெக்னாலஜியின் வளர்ச்சி ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையிலேயே ஆயிரக்கணக்கான வேலை இழப்புகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த டெக்னாலஜி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வளர்ந்து விட்டால் கோடிக்கணக்கான நபர்கள் வேலை இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 30 கோடி மக்கள் உலகம் முழுவதும் வேலை இழப்பார்கள் என்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் AI மிக எளிய முறையில் வேலையை முடித்து தருகிறது என்பதும் இதன் காரணங்களால் பல துறைகளில் மனிதர்கள் வேலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். AI தொழில்நுட்பம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்ட நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் மட்டும் 47 சதவீத வேலைவாய்ப்புகள் AI தொழில்நுட்பத்தால் குறைக்கப்படலாம் என்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் இதே போன்ற பாதிப்பு ஏற்படும் என்றும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

அன்றாட வேலைகளில் மிகப்பெரிய புரட்சியை AI தொழில்நுட்பம் மாற்றி அமைத்து வருகிறது என்றும் சில ஆண்டுகளில் AI மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. உலக அளவில் 30 கோடிக்கு அதிகமான வேலை இழப்புகள் ஏற்படும் என்றும் அந்த ஆய்வு நிறுவனம் உறுதிபட கூறியுள்ளது. குறிப்பாக இனிமேல் ஒயிட் கலர் ஜாப் என்று கூறப்படும் வேலைகளை நம்பி மனிதர்கள் இருக்க முடியாது என்றும் உடல் உழைப்பு மூலம் செய்யும் தொழில் மட்டுமே தப்பிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

AI தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் வேலைகள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

கோடிங் பணிகள் மற்றும் கணினி பொறியியல் போன்ற தொழில்நுட்ப வேலைகள் AI தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும்.

பத்திரிகை, விளம்பரம் மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற ஊடக வேலைகள்,
சட்ட உதவியாளர்கள் மற்றும் சட்ட வல்லுனர்களின் வேலைகள் AI தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும்

சந்தை ஆராய்ச்சி ஆய்வாளர் வேலைகள், நிதி மற்றும் வர்த்தக
வேலைகளுக்கு AI தொழில்நுட்ப, அச்சுறுத்தலாக இருக்கக்கூடும். ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் AI தொழில்நுட்பம் வேலையை மாற்றுவது தற்போதைய அச்சுறுத்தல் அல்ல என்றும், அது நடக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்

மேலும் உங்களுக்காக...