வெறும் 18 ரூபாய்க்கு ரீசார்ஜ்.. அன்லிமிடெட் கால், டேட்டா, எஸ்.எம்.எஸ்.. அசத்தும் பி.எஸ்.என்.எல்..!

வெறும் 18 ரூபாய் இருந்தால் போதும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்பதும் அந்த 18 ரூபாயில் அன்லிமிடெட் கால், தினமும் ஒரு ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும் என்ற சலுகையை…

bsnl

வெறும் 18 ரூபாய் இருந்தால் போதும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்பதும் அந்த 18 ரூபாயில் அன்லிமிடெட் கால், தினமும் ஒரு ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும் என்ற சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ள நிலையில் மற்ற நிறுவனங்கள் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவ்வப்போது சலுகையை அறிவித்தாலும் ரீசார்ஜ் கட்டணங்களையும் அதிகரித்து வருவதால் பயனர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் தான் பிஎஸ்என்எல் அதிரடியாக களத்தில் இறங்கி குறைந்த ரீசார்ஜில் அதிக பலன்களை கொடுத்து வருகிறது.

மேலும் தற்போது 4G அம்சத்தை பிஎஸ்என்எல் கொண்டுள்ளதால் அனைவரும் பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை வாங்கி வருகிறார்கள் என்றும் கடந்த சில மாதங்களில் 79 லட்சம் புதிய பயனர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது மிகவும் குறைந்த ரீசார்ஜ் திட்டமான ரூபாய் 18 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இந்த 18 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் வேலிடிட்டி என்றும் தினமும் ஒரு ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல்  நிறுவனத்தின் இந்த புதிய அறிவிப்பு மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இருப்பினும் பிஎஸ்என்எல் அளவுக்கு தரை மட்டமாக இறங்கி புதிய திட்டங்களை தனியார் நிறுவனங்கள் அறிவிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.