அமெரிக்காவை உலக வல்லரசாக நிலைநிறுத்துவதில் டாலரின் பங்கு மிக முக்கியமானது. உலக வர்த்தகத்தில் டாலர் முக்கிய பரிவர்த்தனை நாணயமாக இருந்து வந்தது. ஆனால், இந்த நிலை மெல்ல மாறிவருகிறது.
குறிப்பாக, 2022-ஆம் ஆண்டு ரஷ்யா டாலரில் வர்த்தகம் செய்ய மறுத்து, உலக நாடுகள் தங்கள் சொந்த கரன்சிகளில் வர்த்தகம் செய்யலாம் என்று அறிவித்தபோது, அமெரிக்காவுக்கு முதல் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்தியாவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்திய ரூபாயில் வாங்கியபோது, டாலரின் முக்கியத்துவம் மேலும் சரிய தொடங்கியது.
பிரிக்ஸ் நாடுகள் மற்றும் தங்கத்தின் பங்கு
இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு, டாலருக்கு மாற்றாக ஒரு பொதுவான கரன்சியை உருவாக்குவதற்கு பதிலாக, தங்கத்தின் அடிப்படையில் வர்த்தகம் செய்ய முடிவு செய்தது. இது டாலருக்கு ஒரு நேரடி சவாலாக அமைந்தது.
வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு தங்கத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பொதுவான கரன்சியின் தேவை இல்லாமல் போகும் என்பது இந்த நாடுகளின் யுக்தி. ஆனால், அமெரிக்கா இதை தாமதமாகவே உணர்ந்தது. பிரிக்ஸ் நாடுகள் வர்த்தகத்திற்கு தங்கத்தை ஒரு பரிமாற்ற ஊடகமாக பயன்படுத்துகின்றன என்பதை அறிந்த அமெரிக்க அரசுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவின் வலுவான நிலைப்பாடு
இந்தியாவிடம் 24,000 டன் தங்கம் குடும்ப பெண்களிடம் சேமிப்பாக உள்ளது. இது இந்தியாவின் தங்க கையிருப்பின் பெரும் பலத்தை காட்டுகிறது. இந்த சூழலில், இந்தியா ஏற்கனவே தங்கத்தின் மூலம் வர்த்தகம் செய்ய தயாராகவே இருக்கிறது என்பதை அமெரிக்கா இப்போதுதான் உணர்ந்துள்ளது. டாலருக்கு பதிலாக தங்கத்தை பயன்படுத்தும் இந்தியாவின் இந்த நகர்வு, அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்திற்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. இது இந்தியாவின் வெளியுறவு கொள்கையின் ஒரு முக்கிய வெற்றியை காட்டுகிறது.
டாலர் இனி மற்ற நாடுகளுக்கு தேவையற்ற ஒன்றாக மாறி வருவதாகவும், டாலர் வர்த்தகத்திற்கு பதிலாகத் தங்க வர்த்தகம் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. மோடியின் இந்த புத்திசாலித்தனமான நகர்வு, அமெரிக்காவின் டாலர் ஆதிக்கம் என்ற அடித்தளத்திற்கே சவாலாக அமைந்துள்ளதால், உலக வர்த்தகத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதாகப்பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
