மூன்று முறை உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த பிரபல கால்பந்து வீரர் பீலே காலமானார் என்ற செய்தி உலக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரேசில் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் பீலே 1940ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். தனது 16 வயதிலேயே கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்காக விளையாடினார் என்பதும் அவர்கள் விளையாட்டு ஆரம்பம் முதலே அபாரமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
1958ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் கால்பந்து தொடரில் பிரேசில் அணிக்காக பங்கேற்று அவர் பம்பரமாக சுழன்று அரையிறுதியில் ஹாட்ரிக் கோல் அடித்து வியக்க வைத்தார் என்பதும் இறுதிப்போட்டியில் சுவீடனை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக்கோப்பையை பிரேசில் வெல்ல முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் 1962, 1970ஆம் ஆண்டுகளில் பீலே உலக கோப்பையை பிரேசில் அணிக்காக பெற்றுத் தந்தார் என்பதும், உலக கோப்பை போட்டியில் அவர் அடித்த கோல்கள் மட்டும் மொத்தம் 12 என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கால் பந்தாட்ட வீரர் பீலே கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து உலகம் முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
