பழனியில் நடைபெற்றது முருகன் மாநாடு இல்ல.. இந்து விரோத மாநாடு.. ஹெச். ராஜா காட்டம்

By John A

Published:

தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியல் குறித்த படிப்பிற்காக லண்டன் சென்றிருக்கிறார். தற்போது அவரின் பொறுப்புகளை ஹெச். ராஜா நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார் ஹெச். ராஜா. நிகழ்ச்சி முடிந்ததும் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அடுத்தடுத்த அப்டேட்களால் எகிற வைக்கும் தி கோட் படத்தின் எதிர்பார்ப்பு.. இப்போ என்ன அப்டேட் தெரியுமா?

அப்போது அவர் பேசியதாவது, “சனாதன இந்து மதத்தின் எதிரியாக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். அவர் மீது இது குறித்து வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் 100% இந்து விரோத தீய அரசாங்கம் தான் இருக்கிறது. இந்து மதத்தை, சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு போல ஒழிப்பேன் எனக் கூறிய தீய சக்தி. சனாதன தர்மம் என்றால் அது இந்து மதம் என்று உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது.

ஆகவேதான் உதயநிதி ஸ்டாலின் சொன்னது போல் இது ஆன்மீக மாநாடு இல்லை. சரிதான். பழனியில் நடைபெற்றது இந்து விரோத மாநாடு. நீங்கள் முருகனை வைத்து இந்து மதத்தில் ஏமாற்று அரசியல் செய்வதை இந்துக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கூட்டத்திற்கு காசு கொடுத்து நடத்தப்பட்ட மாநாடு அது. இது இந்து ஆன்மீக மாநாடே கிடையாது.” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்விழாவில் நடிகை கஸ்தூரி, இந்து மக்கள் கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் டி. குருமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.