3 வருஷ லவ்தீகம்.. மருமகள் மீது மாமியாருக்கு வந்த காதல்.. புருஷனை பிரிந்து பெண் எடுத்த முடிவு..

Published:

இந்த உலகத்தில் எப்போதுமே காதல் கதைக்கு பஞ்சமே இருக்காது. எந்த பக்கம் திரும்பினாலும் ஏதாவது ஒரு வித்தியாசமான அல்லது உணர்வுப்பூர்வமான காதல் கதைகள் நிறைய அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அரங்கேறிய ஒரு காதல் பலரது மத்தியில் பல விதமான கருத்துக்களையும் பெற்று வருகிறது.

ஆண், பெண் மாறி மாறி காதலிப்பது என்பது வழக்கமாக இருக்கும் சூழலில் அதை தாண்டி ஒரே பாலினத்தவரும் மற்றொருவர் மீது காதல் வயப்படுவது சமீப காலமாக வழக்கமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இந்தியாவிலும் இன்று பல இடங்களில் மிக வெளிப்படையாகவே இந்த உறவு இருந்து வரும் சூழலில், அப்படியான ஒரு காதல் கதையை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் என்னும் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் சுமன். இவர் சற்று நடுத்தர வயதை சார்ந்த பெண்ணாக இருக்கும் சூழலில் தனது கணவரையே தனது காதலிக்காக பிரிந்து விட்டு வந்தது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அதுவும் அவர் காதலித்தது யாரை என்பதுதான் இன்னும் திருக்கிட வைத்துள்ளது.

சுமனின் குடும்பத்தில் அவருக்கு மருமகள் உறவு வரும் ஷோபா என்ற பெண்ணை தான் அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. கடந்த மூன்று வருடத்தில் சுமன் மற்றும் சோபா ஆகியோர் மிக உருக்கமாக காதலித்து வந்த நிலையில் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுமன் ஒரு ஆணை போன்று உடை உடுத்தி இருக்க, சோபா மணமகள் உடையில் இருக்க இவர்கள் இருவரும் சமீபத்தில் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில் ஒரு பக்கம் ஆதரவும் இன்னொரு பக்கம் விமர்சன கருத்துக்களும் உருவாகியுள்ளது.

இந்த முடிவு குறித்து சுமன் பேசுகையில், “சோபா தான் என்னுடைய காதல் வாழ்க்கை. அவர் வேறொரு ஆணை திருமணம் செய்து கொள்வதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. நாங்கள் ஒருவரை ஒருவர் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் தான் திருமணம் செய்து ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தோம்.

இந்த உலகம் எங்களைப் பற்றி என்ன நினைத்தாலும் கவலையில்லை என்று முடிவெடுத்த பின்னர் தான் இந்த ஏற்பாடை செய்தோம்” என சுமன் கூறியுள்ளார். ஒரு பக்கம் ஒரு நபர் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்றும் அவரவர்கள் தனிப்பட்ட விருப்பம் என இந்த முடிவிற்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்தாலும் இன்னொரு பக்கம் இது கலியுகத்தின் அறிகுறி என்றும் இயற்கைக்கு எதிரானது என்றும் சட்ட திட்டங்களை மீறி நடந்த திருமணம் என்றும் பலர் விமர்சனங்களையும் குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...