Bigg Boss Tamil Season 8 Day 96: முடிவுக்கு வந்த ஆடிய ஆட்டம் என்ன டாஸ்க்… ஜாக்குலின் சௌந்தர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு…

Bigg Boss Tamil Season 8 Day 96 இல் முன்னாள் போட்டியாளர்கள் வந்ததும் தான் வந்தார்கள் ஒரே குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு முந்தைய சீசன்களில் முன்னாள் போட்டியாளர்கள் உள்ளே வந்தாலுமே…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 96 ல் முன்னாள் போட்டியாளர்கள் வந்ததும் தான் வந்தார்கள் ஒரே குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு முந்தைய சீசன்களில் முன்னாள் போட்டியாளர்கள் உள்ளே வந்தாலுமே வெளியே என்ன நடக்கிறது என்பதை லேசாக மேலோட்டமாக சொல்வார்கள் அதோடு நிறுத்திக் கொள்வார்கள்.

bigg boss 59

ஆனால் இந்த சீசனில் வெளியில் இருந்து வந்த முன்னாள் போட்டியாளர்கள் நம்மை வெளியே அனுப்பி விட்டார்களே இவர்களெல்லாம் உள்ளே இருக்கிறார்கள் இவங்க ஒன்றுமே செய்யலையே அவங்க எப்படி இருக்கலாம் என்ற அளவுக்கு வன்மத்தை கக்குவது போல் இருக்கிறது. இப்படி ஒவ்வொருவரும் நேற்றைய தினம் சௌந்தர்யாவை கூறி அவரை மிகவும் அழ வைத்துவிட்டனர்.

அடுத்ததாக ஜாக்லின், சௌந்தர்யா என தனித்தனியாக ஒவ்வொருவரிடம் பேசி கொண்டு இருந்ததால் ஜாக்குலினுக்கும் சௌந்தர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்கும் நீண்ட நேரம் பிரச்சினை சென்று கொண்டே இருந்தது. ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொண்டனர்.

இதற்கிடையில் தீபக் ஏதோ சொல்ல போக வர்ஷினி அவர் ஒரு பக்கம் உட்கார்ந்து அழுது கொண்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தீபக் நல்லா நடிக்கிறார் சேஃப் கேம் விளையாடுகிறார். உங்கள் எல்லாருக்கும் தெரியவில்லை என்று உள்ளே இருக்கும் போட்டியாளர்களிடம் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் இவர்கள் போட்ட இந்த தேவையில்லாத சண்டைகளால் மிகவும் போர் அடித்து விட்டது என்று சொல்லலாம்.

ஆனால் இறுதியில் நடந்த நல்ல விஷயம் என்றால் அது ஆடிய ஆட்டம் என்ன டாஸ்க் தான். அதில் டான்ஸ் மாரத்தான் என்று இருவரை சேர்த்து சேர்த்து டான்ஸ் ஆட வைத்தார்கள். இது கொஞ்சம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. முத்துக்குமரன் டான்ஸ் ஆடிய விதம் விஜய் சேதுபதி போல அவர் பண்ணிய ஆக்சன்கள் நன்றாக பண்ணியிருந்தார். இறுதியில் இந்த ஆடிய ஆட்டமென்ன டாஸ்க்கும் நிறைவடைந்து விட்டது. இந்த டாஸ்க்கின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.

bigg boss 60

அதற்கு அடுத்ததாக பிரமோஷன்களுக்கான டாஸ்க்கள் நடைபெற்றது. அது கொஞ்சம் விறுவிறுப்பாக சென்றது. இனி அடுத்ததாக விஜய் சேதுபதி எபிசோடு நடைபெற இருக்கிறது. போட்டியாளர்கள் உள்ளே வந்து ஏற்படுத்திய குழப்பங்களை கண்டிப்பாக விஜய் சேதுபதி கேட்பார் என்பது போல் தெரிகிறது. அதேபோல் உள்ளே இருக்கும் எட்டு போட்டியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகளையும் கூறுவார் என்றும் பேசப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.