பிக் பாஸ் 8: அவரோட உரிமைன்னு இப்படி தான் பண்ணுவாரா.. ஆண்கள் அணியில் ஏற்பட்ட பிளவு?..

By Ajith V

Published:

Arun Prasath, Deepak and Vishal : தமிழில் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரையில் ஆண்கள் அணியில் அதிக ஒற்றுமை இருந்து கொண்டதாகவே காணப்பட்டு வந்தது. மொத்தம் 18 போட்டியாளர்களில் இதுவரை எலிமினேட் ஆன இரண்டு பெயர்களும் ஆண்களாக இருந்தாலும் அதனைத் தாண்டி அவர்களுக்கு இடையே இருக்கும் ஒற்றுமை இன்னும் அடுத்தடுத்த நாள்களில் அதிக சவால்களை பெண்கள் அணிக்கு கொடுக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

அப்படி ஒரு சூழலில் தான் தீபக்கால் தற்போது ஆண்கள் அணியில் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அர்வ் மற்றும் பேட்மேன் ரவீந்திர் கிய இருவரும் வெளியேறியுள்ள நிலையில் தீபக், விஷால், அருண், முத்துக்குமரன், ஜெப்ரி, சத்யா, ரஞ்சித் உள்ளிட்ட ஏழு போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தனித்தனியாகவும் ஒரு குழுவாகவும் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

அதே நேரத்தில் ஆண்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கிலும் அனைவரும் மிக கவனமாக செயல்பட்டு வருவதால் டாஸ்க்கில் கூட பெண்கள் அணியைத் தாண்டி அவர்களால் வெற்றி பெறவும் முடிகிறது. இதற்கிடையே மூன்றாவது வாரமும் சமீபத்தில் ஆரம்பமாகியுள்ள நிலையில் தான் தீபக் செய்த சில விஷயங்கள் விஷால் மற்றும் அருண் பிரசாத் ஆகியோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் பெண்கள் அணியில் இணைந்திருந்த தீபக்கும், ஆண்கள் அணியில் இருந்த தர்ஷா குப்தாவும் முதலில் நேரடியாக அனைவரின் முன்னிலையில் நாமினேஷன் அறிவிக்க வேண்டும் என பிக் பாஸ் கூறுகிறார். அப்போது தர்ஷாவை தீபக் நாமினனேட் செய்ததாக தெரிகிறது. இது பற்றி பின்னர் அருணிடம் பேசும் விஷால், “தீபக் ண்ணா ஏன் தர்ஷா குப்தா நாமினேட் பண்ணனும். மத்தவங்களை ஏன் நாமினேட் பண்ணல. அவரு என்னவோ ரொம்ப சேபா அவருடைய கேம் ஆடுறது மாதிரி இருக்கு.

அவர் எல்லாரையும் ரொம்ப ஓவர் ஷேடோ பண்றார் அப்படின்னு நினைக்கிறேன்” என்கிறார். அப்போது பேசும் வரும் அருண், விஜய் சேதுபதி முன்னிலையில் தான் யாராவது தன்னால் ஓவர் ஷேடோ செய்யப்படுவதாக உணர்ந்தால் வந்து கூறும்படி தீபக் கூறினார். இதனால் நான் தீபக்கிடமே இதை பற்றி நேரடியாக பேசலாம் என்று இருக்கிறேன் என்றார்.

விஷாலும் இதற்கு ஒப்புக்கொள்ள காய்கறி வெட்டினால் கூட ஏதோ நான் எனக்கு வெட்ட தெரியாது என்பது போல் அவர் வந்து அறிவுரை வழங்குகிறார். அனைவருமே இடம் கிடைத்தால் தான் விளையாட முடியும் என்றும் தீபக் அனைவரையும் தாண்டி முன்னிலையில் இருக்க வேண்டும் என இப்படி எல்லாம் செய்வதாகவும் விஷால் குற்றம் சுமத்துகிறார். இதுவரையில் பெரிய அளவில் அருண், தீபக், விஷால், சத்யா ஆகியோருக்கிடையே சண்டை வராத சூழலில் வரும் நாட்களில் பிளவு வரலாம் என்றும் கருதப்படுகிறது.