வாடிக்கையாளர் விட்டு சென்ற பர்ஸ்.. கூகுளில் தேடி ஒப்படைத்த ஹோட்டல் நிர்வாகம்..!

By Bala Siva

Published:

பெங்களூரில் உள்ள ஒரு ஹோட்டல் நிர்வாகம் வாடிக்கையாளர் விட்டுச் சென்ற பர்ஸை கூகுளில் அவருடைய பெயரை தேடி அவருடைய முகவரியையும் கண்டுபிடித்து ஒப்படைத்த ஆச்சரியமான தகவல் குறித்து நெட்டிசன்கள் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

பெங்களூரைச் சேர்ந்த ரோஹித் குமார் என்பவர் அந்நகரில் உள்ள மிகப்பெரிய ஹோட்டலுக்கு காபி சாப்பிட சென்றார். ரோகித் என்ற அந்த நபர் காபி சாப்பிட்டு விட்டு பில் செலுத்திவிட்டு தனது பர்சை அங்கே மறந்து வைத்து விட்டு சென்று விட்டார். அந்த பர்ஸில் தான் அவர் தனது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஆதார் அட்டை, பான் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வைத்திருந்தார்.

வீட்டுக்கு வந்த பிறகு தனது பர்ஸ் தொலைந்து போனது எண்ணி அவர் அச்சப்பட்டார். தனது பர்சில் உள்ள ஆவணங்களை யாராவது தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக அவர் அஞ்சினார். இதனை அடுத்து பர்ஸை எங்கே தொலைத்தோம் என்று அவருக்கு ஞாபகம் இல்லை என்பதால் அவர் ஹோட்டல் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவில்லை.

இந்த நிலையில் வாடிக்கையாளர் தனது தனது பர்சை விட்டு விட்டு சென்று விட்டதை அறிந்து ஹோட்டல் நிர்வாகம் உடனடியாக அதில் உள்ள ஆவணங்களை பார்த்தார். அதில் பர்ஸுக்கு சொந்தமானவரின் முழு விவரங்கள் இருந்த நிலையில் அவரது பெயரை கூகுளில் போட்டு தேடிப் பார்த்தனர். அப்போது அவரது முகவரி மற்றும் மொபைல் எண் கிடைத்தது. இதையடுத்து அவரை தொடர்பு கொண்ட ஹோட்டல் நிர்வாகம் உங்கள் பர்ஸ் பத்திரமாக உள்ளது உடனடியாக வந்து பெற்றுக் கொள்ளவும் என்று தகவல் கொடுத்தனர்

இதனை அடுத்து ஆச்சரியம் அடைந்த ரோஹித் உடனடியாக அந்த ஹோட்டலுக்கு சென்று தனது ஆவணங்களை பெற்றுச் சென்றார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த போது நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்தனர். பெங்களூரு நல்ல நகரம் என்பதால் உங்களுடைய பர்ஸ் கிடைத்துவிட்டது இதேபோன்று வேறு நகரங்களில் நீங்கள் பர்ஸை தொலைத்து இருந்தால் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்தார். இந்த சம்பவம் நம்ப முடியாததாக இருந்தாலும் உண்மையில் இது நடந்திருந்தால் உண்மையில் ஆச்சரியமான அனுபவம் தான் என்று இன்னொரு நெட்டிசன் பதிவு செய்துள்ளார்.