ஆட்டோவுக்குள்ள இப்படி ஒரு புதுமையா.. பெண் பயணியை வியக்க வைத்த ஓட்டுநர்.. வைரல் சம்பவம்..

Published:

நாம் தினந்தோறும் பார்க்கும் இயல்பான விஷயங்களில் இருந்து சற்று மாறுபட்டு ஏதேனும் புதுமையாக நடைபெறும் சமயத்தில் அவை இணையவாசிகள் மத்தியில் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகும். இப்படி நாள்தோறும் ஏராளமான விஷயங்கள் இணையவாசிகள் மத்தியில் அதிக கவனம் பெற்று வரும் நிலையில் தற்போதும் அப்படி ஒரு சம்பவம் குறித்த செய்தியை தான் நாம் பார்க்க போகிறோம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இங்கே இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவதற்கு நிகராக பலரும் ஆட்டோக்களையும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். வயதான ஆட்கள் வீட்டில் இருக்கும் போது அருகே மருத்துவமனைக்கு அல்லது வேறு இடங்களுக்கு செல்வதற்கோ ஆட்டோ என்பது சிறந்த போக்குவரத்து வசதியாகவும் இருந்து வருகிறது.

குறைந்த செலவில் நாம் நினைக்கும் இடத்தில் நல்ல வசதியுடன் சென்று வரலாம் என்பதால் மோட்டார் பைக்கை தாண்டி அதிகமாக ஆட்டோக்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் அதிகமாக உள்ளனர். குறைந்த தூர பயணம் என்றாலோ அல்லது சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் பயணம் என்றாலோ வரும் வாடிக்கையாளர்கள் வித்தியாசமாக உணர வேண்டும் என்பதற்காக நிறைய புதுமையான விஷயங்களையும் தங்கள் ஆட்டோக்களில் ஓட்டுநர்கள் புகுத்தி வருகின்றனர்.

நிறைய நிறங்களில் லைட் போடுவதும், ஆட்டோவை சிறப்பாக அலங்காரம் செய்வதும், அதில் மனதை கவரும் வகையிலான வசனங்களை இடம்பெற செய்வதும் என வாடிக்கையாளர்களை கவரக்கூடிய அம்சங்கள் நிறைய இருக்கும். தமிழகத்தில் கூட ஒரு அண்ணா துரை என்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவுக்குள் டேப் தொடங்கி செய்தித்தாள், மேகசிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் வைத்து மிகச் சிறப்பாக வடிவமைத்திருந்தது சர்வதேச அளவில் அதிக கவனம் பெற்றிருந்தது.

அப்படி இருக்கையில் தற்போது தன்வி கெய்க்வாட் என்ற பெண் ஒருவர் தனது எக்ஸ் தள பதிவில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் குறித்து பகிர்ந்த விஷயம் அதிக கவனம் பெற்று வருகிறது. பெங்களூருவில் தன்வி கெய்க்வாட் என்ற பெண் ஒருவர் சமீபத்தில் ஆட்டோ ஒன்றில் பயணம் மேற்கொண்டுள்ளார். ஒரு பக்கம் வாடிக்கையாளர்கள் ஏறுவதற்கு வசதியாக வழி இருக்கும் சூழலில், இன்னொரு பக்கம் ஜன்னல் ஒன்றையும் அந்த ஆட்டோ ஓட்டுனர் வடிவமைத்துள்ளார்.

வீட்டின் அறையில் இருக்கும் ஜன்னல் போல இந்த ஆட்டோவின் ஒரு பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் மிக வித்தியாசமான பயணமாகவும் தன்வி கெய்க்வாட் உணர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தையும் அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிகம் பேசு பொருளாகவும் மாறி உள்ளது.
Woman Posts Pic Of Auto Rickshaw With A Window In Bengaluru, Internet Calls It 'Cool'

பலரும் இதனை புஷ்ப விமானம் என்றும் 1 BHK வீடு என்றும் வேடிக்கையான கருத்துக்களையும் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் பயணிகளுக்காக ஒரு பக்கம் ஜன்னலை வைத்து வெளியே ரசிக்கும் படி செய்த ஆட்டோ ஓட்டுநரின் புது முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...