ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்கலாம்: பாங்க் ஆப் பரோடா புதிய வசதி..!

Published:

ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்க வேண்டும் என்றாலே ஏடிஎம் கார்டு அவசியம் வேண்டும் என்பதும் குறிப்பாக அதனுடைய பின் நம்பர் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதும் தெரிந்ததே. ஆனால் ஒரு சில தனியார் வங்கிகள் தற்போது ஏடிஎம் கார்டு இல்லாமல் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதியை செய்து தந்திருக்கும் நிலையில் முதல் முதலாக அரசுத்துறை வாங்கியான பாங்க் ஆப் பரோடா இந்த வசதியை தங்களது வாடிக்கையாளர்களுக்காக செய்துள்ளது. எனவே பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம் மிஷினில் ஏடிஎம் கார்டு இல்லாமல் யு பி ஐ மூலம் பணம் எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பரிவர்த்தனையை தினமும் 5000 முதல் 10 ஆயிரம் வரை தினமும் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் இந்தியாவில் 11000 இருக்கும் நிலையில் அந்த ஏடிஎம் மிஷின்களில் உள்ள பெரும்பாலான மெஷின்களில் இந்த வசதி கொண்டுவரப்படும் என பேங்க் ஆப் பரோடா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமல் ஏடிஎம் மிஷினில் பணம் எடுப்பது எப்படி என்பது குறித்த வழிமுறைகளை தற்போது பார்ப்போம்

1. ICCW சேவை இயக்கப்பட்ட பேங்க் ஆஃப் பரோடா ஏடிஎம்மிற்குச் செல்லவும்.
2. ஏடிஎம் மெனுவிலிருந்து **ICCW** விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
3. உங்கள் மொபைல் எண் மற்றும் UPI பின்னை உள்ளிடவும்.
4. நீங்கள் திரும்பப் பெற விரும்பும் தொகையைத் தேர்ந்தெடுக்கவும்.
5. உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
6. உங்கள் பணத்தை சேகரிக்கவும்.

இந்த பரிவர்த்தனையின்போது கவனிக்க வேண்டிய சில கூடுதல் விஷயங்கள் இதோ:

* ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக எடுக்க வேண்டிய தொகை ரூ.5,000 மட்டுமே
.
* ICCW சேவையைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறை பணம் எடுக்கலாம்.

* இந்தச் சேவையைப் பயன்படுத்த, உங்களிடம் பேங்க் ஆஃப் பரோடா சேமிப்புக் கணக்கு மற்றும் UPI-இயக்கப்பட்ட மொபைல் எண் இருக்க வேண்டும்.

ICCW சேவையை செயல்படுத்த, நீங்கள் பேங்க் ஆஃப் பரோடா கிளைக்குச் சென்று கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி உங்களுக்காக QR குறியீட்டை உருவாக்கும், அதை நீங்கள் ATM இல் ஸ்கேன் செய்து சேவையை செயல்படுத்தலாம்.

மேலும் உங்களுக்காக...