பொதுவாக யூபிஐ மூலம் பணம் அனுப்ப வேண்டும் என்றால் வங்கி கணக்கு இருக்க வேண்டும் என்பதும் குறைந்த பட்சம் கிரெடிட் கார்டு இருக்க வேண்டும் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் வங்கி கணக்கு இல்லாமலே யூபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி கணக்கு இல்லாமல் யூபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்ய புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு டெலிகேடட் பேமெண்ட் சிஸ்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தில் உள்ள யாராவது ஒருவருக்கு வங்கி கணக்கு இருந்தால் அந்த வங்கி கணக்கை அதே குடும்பத்தில் உள்ள வேறு ஒருவர் பயன்படுத்திக் கொள்ளலாம். அது மட்டும் இன்றி வங்கி கணக்கு உள்ளவரின் மொபைலில் இருந்து மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள மற்றொரு நபரின் மொபைலில் இருந்தும் இந்த சேவையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் இந்த வசதி சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குடும்பங்களுக்கு மட்டும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிரெடிட் கார்டு அல்லது கடன் தொகை உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி கிடையாது.
வங்கியில் அக்கவுண்ட் வைத்து இருப்பவரின் அனுமதி பெற்று பயனர்கள் தங்கள் மொபைலில் யூபிஐ மூலம் பணம் செலுத்தலாம்.