உங்கள் வங்கி கணக்கில் KYC அப்டேட் செய்யவில்லை, இன்று மாலைக்குள் அப்டேட் செய்யாவிட்டால் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்படும் என்று யாராவது உங்கள் மொபைலுக்கு போன் செய்தோ அல்லது மெசேஜ் அனுப்பினாலோ, அதை கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள். அதில் உள்ள குறிப்புகளை பின்பற்றினால் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள அனைத்து பணத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறான மோசடிகள் ஈடுபடுபவர்கள் முதலில் மொபைல் வழியாக அழைத்து KYC விபரங்களை இன்றைய அப்டேட் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என்றும் கூறுவார்கள். மேலும் KYC அப்டேட் செய்வதற்கு என்று KYCQC என டைப் செய்ய சொல்லி அதில் உள்ள செயலியை டவுன்லோட் செய்து KYC விவரங்களை பதிவு செய்ய சொல்வார்கள்.
ஒரு கம்ப்யூட்டரை இன்னொரு வேறொருவர் பயன்படுத்துவதற்கு ANYDESK போன்ற செயலிகள் இருப்பது போல் தான் இந்த KYCQC என்ற செயலி. இந்த செயலியை நீங்கள் டவுன்லோட் செய்து உபயோகித்தால் உபயோகித்த பிறகு ஐந்து ரூபாய் மட்டும் அனுப்புங்கள் என்று கூறுவார்கள்.
அந்த ரூபாயை நீங்கள் அனுப்பி விட்டால் உடனே உங்கள் மொபைலை அவர்கள் ஹேக் செய்து உங்கள் மொபைலில் உள்ள அனைத்தையும் அவர்கள் பார்க்கும் வகையில் இருக்கும். ஐந்து ரூபாய் எதற்கு அனுப்ப சொல்கிறார்கள் என்றால் உங்கள் பயனர் கணக்கு, பாஸ்வேர்ட், பின் நம்பர், ஓடிபி அனைத்தையும் அவர்கள் ஸ்கிரீன் ஷாட் செய்து கொள்வதற்காக தான்.
அதன்பின் உங்கள் வங்கி கணக்கில் நுழைந்து தங்களுடைய வங்கி கணக்குகளில் பதிவு செய்து மொத்த பணத்தையும் மோசடி செய்வார்கள். வங்கியை பொருத்தவரை KYC ஆன்லைன் மூலம் அப்டேட் செய்யுங்கள் என்று கேட்க மாட்டார்கள், அதனை புரிந்து கொண்டு மோசடியாளர்கள் இடமிருந்து உங்கள் பணத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
