பாஸ்போர்ட், விசா இன்றி இந்தியா வந்து வீடியோ எடுத்த யூடியூபர்.. ஒரு வருடத்திற்கு பின் தெரிந்த உண்மை..!

By Bala Siva

Published:

பாஸ்போர்ட் மற்றும் விசா என எந்த நடைமுறையும் இன்றி இந்தியாவுக்குள் ஊடுருவி வீடியோ எடுத்த யூடியூபர் ஒருவரின் செயல் ஒரு வருடத்திற்கு பின் தற்போது சமூக வலைதளங்களில் தெரிய வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேசத்தை சேர்ந்த யூடியூபர் ஒருவர் ஒரு வருடத்திற்கு முன் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்தியாவுக்கு பாஸ்போர்ட், விசா இன்றி நுழைந்ததாகவும் இந்தியாவில் உள்ள பல பகுதிகளை வீடியோ எடுத்ததாகவும் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ கடந்த ஒரு ஆண்டில் ஏராளமான வியூஸ்களை பெற்றுள்ள நிலையில் தற்போது தான் கவனத்திற்கு வந்துள்ளது. இது குறித்து சமூக வலைதள பயனாளி ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்து பாஸ்போர்ட் விசா இன்றி எப்படி இந்தியாவுக்குள் நுழைந்து இவர் வீடியோ எடுத்தார்? என்றும் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது என்பதுதான் இந்த நிகழ்வு மூலம் தெரிய வருகிறது என்றும் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் இந்த பதிவை பிரதமர் நரேந்திர மோடிக்கும் டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வங்கதேசத்தைச் சேர்ந்த ஏராளமானோர் மேற்கு வங்காளம் வழியாக இந்தியாவிற்கு ஊடுருவி வருகின்றனர் என்று குற்றச்சாட்டு கூறப்படும் நிலையில் தற்போது யூடியூபர் ஒருவர் தைரியமாக பாஸ்போர்ட் விசா இன்றி இந்தியாவிற்கு ஊடுருவி வீடியோ எடுத்து அதை யூடியூபில் பதிவு செய்திருப்பது இந்தியாவின் பாதுகாப்பையே கேள்விக்குறி ஆக்கி உள்ளது என சமூக வலைதள பயனாளிகள் இந்த வீடியோவுக்கு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதையடுத்து மத்திய அரசு இது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்குமா? பாதுகாப்பை பலப்படுத்துமா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.