உபேர் புக் செய்த பெங்களூரு இளம்பெண்.. டிரைவரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி..!

  பெங்களூரில் உள்ள ஒரு பெண், உபர் கேப் புக் செய்த போது அதன் டிரைவரை பார்த்து இன்ப அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சி கலந்த அனுபவம் ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார். ஏனெனில், அந்த…

Uber

 

பெங்களூரில் உள்ள ஒரு பெண், உபர் கேப் புக் செய்த போது அதன் டிரைவரை பார்த்து இன்ப அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சி கலந்த அனுபவம் ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார். ஏனெனில், அந்த கார் ஓட்டியவர், அவர் வேலை செய்கிற அலுவலகத்தில் ஒரு “டீம் லீடர்” என்பதுதான்.

இதை “பெங்களூருவின் சிகப்பு தருணம்” என குறிப்பிடும் அந்த பெண், ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் ஸ்கிரீன்ஷாட்டை X பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த மெசேஜில், “ஒரு வேடிக்கையான விஷயம் நடந்துச்சு. நான் உபர் புக் பண்ணினேன், என்னை பிக்கப் பண்ண வந்தவர் நம் அலுவலகத்தில இருக்குற ஒரு டீம் லீடர்,” என கூறியுள்ளார்.

நீங்கள் ஏன் கேப் ஓட்டுகிறார் என்று கேட்டபோது, “வாழ்க்கையில் கொஞ்சம் ரிலாக்ஸ் வேண்டும், ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் சலிப்பை குறைக்கவே இதைச் செய்கிறேன்” என பதிலளித்ததாக அந்த பெண் சொல்கிறார்.

இந்த சம்பவம் விரைவில் வைரலானது. பலர் இதை ஒரு நகைச்சுவையான தருணமாக எடுத்துக்கொண்டனர். ஆனால் சிலர், பெங்களூருவின் மோசமான போக்குவரத்தை நினைத்து கேள்வி எழுப்பினார்கள். பெங்களூரு போக்குவரத்தில் பல மணி நேரம் சிக்கிக்கொள்வது சலிப்பை தவிர்க்கவா? அதிசயமா இருக்கு!” என பதிவிட்டார்.

மற்றொருவர், “நான் அமெரிக்காவில் வேலை பார்த்தபோது, ஒரு பெரிய நிறுவனத்தின் CEO, எங்கள் வீட்டிற்கு வந்தபோது, முன்பு ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்ததாக கூறினார். அதில் எந்த வெட்கமும் இல்லை. இந்தியாவில் மட்டும் இது பெரிய விஷயமா பார்க்கப்படுகிறது. இந்த டீம் லீடர் உண்மையிலவே இவ்வளவு எளிமையா இருந்தால், வாழ்க்கையில் பெரிய உயரம் அடைவார். வாழ்த்துக்கள்” என கூறியிருந்தார்.

“யாரும் வெறும் வேடிக்கைக்காகவோ, சலிப்புக்காகவோ இதை பண்ணமாட்டாங்க. நிதி பிரச்சனையால் இருக்கலாம்,” எனவும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபோல, 2024 ஜூலை மாதம் மைக்ரோசாஃப்ட்டில் வேலை செய்யும் 35 வயது மென்பொருள் பொறியாளர் ஒருவர், வார இறுதிகளில் தனிமையை போக்குவதற்காக ஆட்டோ ஓட்டும் சம்பவமும் வைரலானது. அந்த புகைப்படத்தில் அவர் தனது கம்பெனியின் டீசர்ட்அணிந்தபடியே ஆட்டோ ஓட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.