வந்தாச்சு FREEDOM… ஆட்டோமொபைல் துறையின் புதிய புரட்சி.. உலகின் முதல் CNG பைக்கை அறிமுகம் செய்தது பஜாஜ் நிறுவனம்..

By John A

Published:

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகின் முதல் CNG பைக்கை பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த பைக்கிற்கு FREEDOM என்று பெயரிடப்பட்டுள்ளது. உலக ஆட்டோமொபைல் சந்தையே எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறிவரும் சூழ்நிலையில் தற்போது அதற்கான தேவை அதிகரித்திருக்கிறது.

மேலும் மத்திய அரசும் எலட்ரிக் வாகனங்களைத் தயாரிப்புக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டிலும் இயங்கும் வண்ணம் பஜாஜ் நிறுவனம் புதிய பைக் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

இந்த பைக் லுக் தற்போது பைக் பிரியர்களைக் கவர்ந்துள்ளது. Freedom என்று பெயர் வைக்கப்பட்ட இந்த பைக்கின் விலை ரூ. 95000-த்திலிருந்து ஆரம்பமாகிறது. டிரம் பிரேக் சிஸ்டம் கொண்ட மாடல் ரூ. 95,000-க்கும், LED முகப்பு விளக்குடன் டிரம் பிரேக் பொருத்தப்பட்ட பைக் ரூ. 1,05,000-க்கும், டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்ட மாடல் ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீலம், கருப்பு, சாம்பல், கருஞ்சிவப்பு, அடர் சாம்பல் போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது.

சென்னையின் புதிய அடையாளமாகப் போகும் கண்ணாடி பாலத்தில் நடக்கத் தயாரா..? தீபாவளிப் பரிசாக காத்திருக்கும் பதிய சுற்றுலாத் தலம்

இந்த பைக் 125 திறனுடன் அகலான ஹேண்ட்பாருடன் சிங்கிள் சஸ்பென்ஸனைக் கொண்டுள்ளது. வேகத்தைப் பொறுத்தவரையில் மணிக்கு 90 கி.மீ முதல் 130 கி.மீ வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கனத்திற்காகவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்குள் இன்று முதல் புக்கிங் நடைபெறுகிறது.

125 சிசி திறனுள்ள பைக்குகள் தற்போது 1 லட்சத்துக்குக் குறையாமல் எதுவும் கிடையாது. எனவே விலையைப் பார்க்கும் போது மற்ற பைக்குகளுடன் ஒப்பிடும் போது சராசரி விலையைக் கொண்டுள்ளது. அட்டகாசமான டிசைனும், லுக்கும் பைக் விரும்பிகளைக் கண்டிப்பாக கவரும் என்பதில் சந்தேகமேயில்லை.

இனி இந்திய சாலைகளின் ராஜவாக பஜாஜ் Freedom CNG பைக்குகள் ஆக்கிரமிக்கும் என்றால் அது மிகையாகாது.