பொம்மை என நினைத்து ஒரு வயது குழந்தை பாம்பை வாயில் வைத்து கடித்த அதிர்ச்சி சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
பீகாரில் ஒரு வயது குழந்தை தனது வீட்டில் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அப்போது அந்த பகுதியில் பாம்பு வந்தது. அந்த குழந்தை பாம்பையும் விளையாட்டு பொம்மை என நினைத்து அதை கையில் எடுத்து விளையாடியதோடு வாயில் வைத்தும் கடித்துள்ளது.
குழந்தை பாம்பை வாயில் வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் உடனடியாக குழந்தையிடம் இருந்து பாம்பை பிடுங்கி வீசிவிட்டு மருத்துவமனை நோக்கி சென்றார். இதனை அடுத்து குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்த நிலையில் முதலுதவி சிகிச்சையும் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் குழந்தை கடித்ததில் உடலின் ஒரு பகுதியில் படுகாயம் அடைந்த பாம்பு உயிரிழந்ததாகவும் பாம்புக்கு விஷத்தன்மை இல்லாததால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் அடிக்கடி வரும் தண்ணீர் பாம்பு தான் அது என்பது தெரிய வந்தது. இருப்பினும் இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.