பாகிஸ்தானின் ஃபெடரல் காஸ்ட்பரி வளாகத்தின் கேஜி கேட் பகுதியில், இன்று காலை 8:11 மணிக்கு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மூன்று ஃபெடரல் வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீர மரணம் அடைந்தனர்.
கேஜி கேட் அருகே முதலில் ஒரு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஃபெடரல் காஸ்ட்பரியை சேர்ந்த மூன்று வீரர்கள் பலியாகினர்.
முதல் குண்டுவெடிப்புக்கு பிறகு, மேலும் இரண்டு தற்கொலை தாக்குதல் நடத்துபவர்கள் உள்ளே நுழைய முயற்சி செய்தனர்.
உள்ளே நுழைந்தவுடன், ஃபெடரல் காஸ்ட்பரி வீரர்கள் உடனடியாக பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அந்த தீவிரவாதிகளை உடனடியாக சுட்டு கொன்றதன் நடவடிக்கையின் காரணமாக ஒரு பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தாக்குதலில் மூன்று வீரர்கள் மரணம் அடைந்தனர். மேலும் இரண்டு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், இராணுவ வீரர்கள் இணைந்து ‘கிளியரன்ஸ் ஆபரேஷனை’ நிறைவு செய்தனர்.
தற்போது, வளாகத்தின் உட்பகுதி, கூரைகள் மற்றும் அனைத்துப் பகுதிகளும் பாதுகாக்கப்பட்ட பிறகு, அப்பகுதி முற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஃபெடரல் காஸ்ட்பரி கேட் மீதான தாக்குதலுக்கு, பாகிஸ்தான் தாலிபான் ( TTP) அமைப்பின் ஒரு பிரிவான ஜமாதுல் அஹ்ரார் பொறுப்பேற்றுள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையிலான அரசுக்கும் இடையேயான உறவில் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
2021-ல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த பிறகு, பாகிஸ்தான் தாலிபான்கள் (TTP) எந்த தடையுமின்றி ஆப்கானிஸ்தானுக்குள் இருந்து செயல்பட முடிகிறது என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.
தாக்குதல் நடத்தியவர்களின் சரியான எண்ணிக்கை குறித்து இன்னும் உறுதியான தகவல் இல்லை. ஆரம்பத்தில், மூன்று தீவிரவாதிகள் தலைமையகத்தை தாக்க முயன்றனர். ஒரு பயங்கரவாதி கேட்டருகே தன்னையே வெடிக்க செய்துகொண்டார். மற்ற இரண்டு பேரும் வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது, எஃப்.சி. வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்று அதிகாரி அஹ்மத், டான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
ஏற்கனவே பொருளாதார சிக்கல், உள்நாட்டு குழப்பம், முனீரின் அதிகார வரம்புகள் ஆகிய காரணங்களால் பாகிஸ்தான் நிலைகுலைந்துள்ள நிலையில் தற்போது TTP தொடர் தாக்குதல், அதுவும் ராணுவ வளாகத்திற்குள்ளே புகுந்து தாக்குதல் நடத்துவது பாகிஸ்தான் அரசுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
