Asus ROG Phone 7: இந்தியாவில் கிடைக்கிறது Asus ROG ஃபோன் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்..!

Published:

உலகின் மிகச்சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களின் முக்கிய சந்தையாக இந்தியா இருந்து வரும் நிலையில் அனைத்து ஸ்மார்ட்போன்களும் அறிமுகமான ஒரு சில மாதங்களில் இந்தியாவின் சந்தைக்கு விற்பனைக்கு வந்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன்கள் உள்பட அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களுமே இந்தியாவை மிகச் சிறிய மிகச் சிறந்த சந்தையாக கருதுவதால் இந்தியாவுக்கு என ஒரு தனி மதிப்பையே அனைத்து ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்களாய் வைத்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் உலக அளவில் புகழ்பெற்ற Asus ROG ஃபோன் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை தற்போது பார்ப்போம்

ROG Phone 7 மற்றும் ROG Phone 7 Ultimate ஆகிய இரண்டு மாடல்கள் மற்றும் ROG Phone 7 கேமிங் ஸ்மார்ட்போன் ஆகிய மாடல் கடந்த மாதம் இந்தியாவில் ரூ.74,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. Asus ROG Phone 7 தொடரின் சிறப்பம்சங்கள் என்னவெனில் இதில் Qualcomm Snapdragon 8 Gen 2 சிப்செட், 165 Hz Samsung AMOLED டிஸ்ப்ளே, கன்சோல் போன்ற கேமிங்கிற்கான AirTrigger மற்றும் 6,000 mAh பேட்டரி ஆகியவை ஆகும்.

Asus ROG Phone 7 மாடலில் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜில் ரூ.74,999 என்றா விலையில் கிடைக்கும். இந்த மாடல் கருப்பு, வெள்ளை என இரண்டு வண்ண வகைகளில் கிடைக்கிறது.

Asus ROG Phone 7 Ultimate மாடல் என்பது 16GB RAM + 512GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் உள்ளது. இதன் விலை ரூ.99,999. இது வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கும்.

Asus ROG Phone 7, ROG Phone 7 Ultimate ஆகியவை 165Hz அம்சத்தில் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இரண்டு கேமிங் ஸ்மார்ட்போன்களும் குவால்காம் அட்ரினோ 740 ஜிபியுடன் இணைந்து 3.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 மொபைல் பிளாட்ஃபார்ம் மூலம் இயக்கப்படுகிறது.

இரண்டு ஸ்மார்ட்போன்களூம் ROG UI மற்றும் Zen UI உடன் Android 13 இல் இயங்கும் தன்மை கொண்டது. Asus ROG ஸ்மார்ட்போன் 7 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜில் கிடைக்கும்.

மேற்கண்ட இரண்டு மாடல்களிலும் டிரிபிள் ரியர் கேமரா உள்ளது. அதில் 50MP SONY IMX766 முதன்மை சென்சார், 13MP அல்ட்ரா-வைட் மற்றும் 8MP மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கும். மேலும் 32MP செல்பி கேமிராவும் இந்த மாடல்களில் உண்டு.

பேட்டரியைப் பொறுத்தவரை, இரண்டு ஸ்மார்ட்போன்களும் 6,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. இது 65W என்ற அம்சம் காரணமாக வேகமான சார்ஜிங் செய்யலாம்.

மேலும் உங்களுக்காக...