ஸ்மார்ட்போன், ஐபோனில் இருக்கும் கேமிரா போலவே ஐபோன் வாட்சில் கேமரா இணைக்கப்பட உள்ளது.
Ultra மாடல், கேமராவை ஐபோன் வாட்சில் பொருத்துவதன் மூலம் பயனர்களுக்கு கூடுதல் அம்சம் கிடைக்கும்.
இந்த கேமரா, iOS 18.1 இல் அறிமுகமான Apple Intelligence மூலம் இயக்கப்படும். மேலும் இந்த கேமிரா Visual Intelligence அம்சம் கொண்டதாக இருக்கும்.
Visual Intelligence மூலம், கேமராக்கள் முக்கியக் காட்சிகள் மற்றும் பொருள்களை அடையாளம் காணலாம். அவற்றின் தகவல்களையும் பெறலாம். .
Apple Watch தனது சுற்றுப்புறங்களை கேமிரா மூலம் பார்த்து, பயனர்கள் புதிய அனுபவத்தை கொடுக்கும். ஆனாலும் ஆப்பிள் இதுவரை இந்த வசதி குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடவில்லை.
மேலும் Apple இன்ஃப்ராரெட் கேமராவுடன் கூடிய AirPods-ஐ உருவாக்குவதாகவும், இது 2026 ஆம் ஆண்டிற்குள் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த AirPods, கைகளை அசைக்கும்போது அதன் சைகைகளை அடையாளம் காணவும், சுற்றுப்புறங்களை உணரவும் உதவலாம்.
ChatGPT மற்றும் Google போன்ற வெளி நிறுவனங்களில் AI பயன்பாட்டை தங்களது வாடிக்கையாளர்கள் குறைத்து தன் சொந்த AI பயன்பாட்டை அதிகரிக்க Apple திட்டமிட்டு வருகிறது. Visual Intelligence தளத்தைக் கொண்டு உருவாக்கப்படும் AirPods, Watches உள்ளிட்ட சாதனங்கள் நிச்சயம் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டமிட்டபடி எல்லாம் அமைந்தால் கேமரா கொண்ட AirPods மற்றும் AI கேமிரா வசதியுள்ள Apple Watch ஆகியவை 2027 ஆம் ஆண்டுக்குள் சந்தையில் வெளியிடப்படலாம்.