ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் கனவாக இருந்து வருகிறது என்பதும் ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பதையே பெருமையாக பலர் கருதி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. அதனால் தான் ஒவ்வொரு ஆப்பிள் ஐபோனின் மாடல்கள் வெளியாகும் போது போட்டி போட்டுக் கொண்டு பழைய மாடலை விட்டு விட்டு புது மாடலை வாங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் ஆப்பிள் ஐபோனை சலுகை விலையை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2020ஆம் ஆண்டு ஆப்பிள் ஐபோன் 12 மினி அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் ஐபோன் 12, ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் வெளியாகின. ஆப்பிள் ஐபோன் 12 மினி சிறிய திரை அளவு கொண்ட ஐபோன்களில் முதன்மையானது. ஆனால் அதே நேரத்தில் மற்ற மாடலில் உள்ள சிறப்பு அம்சங்களைக் அனைத்தும் இதில் இருக்கும்.
விலை குறைவாக அதே நேரத்தில் சிறிய ஸ்மார்ட்போன்களை வைத்திருக்க விரும்பும் மக்களுக்கு மலிவு விலையில் மாற்றாக ஆப்பிள் ஐபோன் 12 மினி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் ஐபோன் 12 மினி ரூ.69,900 என்ற விலையில் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆப்பிள் ஐபோன் 12 ஐ ஒப்பிடும்போது கிட்டத்தட்ட ரூ. 10,000 மலிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆப்பிள் ஐபோன் 12க்ல் உள்ள அதே அம்சம் மற்றும் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய ஸ்மார்ட்போன் என்பதால் இந்த போனை பலர் விரும்பி வாங்கினர். இந்நிலையில் இந்த மினி மாடல் வெளியாகி 3 வருடங்கள் ஆகிவிட்டதால் ஆப்பிள் ஐபோன் 12 மினி தற்போது ரூ.38,151 தள்ளுபடி செய்து பிளிப்கார்ட்டில் ரூ.21,749க்கு கிடைக்கிறது.
ஆப்பிள் ஐபோன் 12 மினி ரூ.8,901 தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் தற்போது ரூ.50,999க்கு விற்கப்படுகிறது. இது தவிர, வாங்குபவர்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு 10% உடனடி தள்ளுபடியை, ரூ.1,250 வரை, ரூ.5,000 ஆர்டர்களில் பெறலாம். இதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 12 மினியின் விலை ரூ.49,749 ஆக குறைந்துள்ளது. இது தவிர, வாங்குபவர்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக ரூ.28,000 வரை தள்ளுபடி பெறலாம். அனைத்து சலுகைகள் மற்றும் வங்கி தள்ளுபடிகளுடன், வாங்குபவர்கள் ஆப்பிள் ஐபோன் 12 மினியை ரூ.38,151 தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.21,749க்கு பெறலாம்.
ஆப்பிள் ஐபோன் 12 மினி ஆப்பிள் வரிசையில் முதல் மினி ஸ்மார்ட்போன் ஆகும். ஆப்பிள் ஐபோன் 12 ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்த்த சலசலப்பை உருவாக்கத் தவறிவிட்டது. ஸ்மார்ட்போன் 5.4-இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளே மற்றும் ஹூட்டின் கீழ், இது A14 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. ஐபோன் 12 மினி நிலையான ஆப்பிள் ஐபோன் 12 போன்ற 12எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது.