பிரைவேட் கிளவுட் கம்ப்யூட்டிங் (PCC) தளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்து, புதிய AI சேவைக்கு அதிகமான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டு நடைபெற்ற உலக மென்பொருள் மேம்பாட்டாளர் மாநாட்டில் ஆப்பிள், “ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்” தொழில்நுட்பத்தை முதன்முறையாக அறிமுகம் செய்தது. இதன் மூலம் Siri செயல்பாடுகளை மேம்படுத்தவும், சாதனங்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் முடிகிறது. இணையத்தில் பாதுகாப்பு சவால்கள் அதிகரித்துள்ள நிலையில், ஆப்பிள் எச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக செயல்படுத்தி வருகிறது.
பக் பவுண்டி திட்டத்தின் மூலம், ஆப்பிள் தனது PCC உள்கட்டமைப்பில் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிய நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது. இதில் பங்கேற்கும் நிபுணர்கள் PCC-யில் உள்ள பாதுகாப்பு சவால்களை ஆய்வு செய்து, சிக்கல்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய அம்சங்களை கண்டறிய முடியும். பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறியும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆப்பிள் கவுரவமான பரிசுகளை வழங்க திட்டமிட்டுள்ளது.