அமெரிக்கக் குடிமகனை அல்லது நிரந்தர குடியுரிமை பெற்றவரை திருமணம் செய்து Green Card பெறும் செயல்முறை தற்போது கடுமையாக மாற்றப்பட்டுள்ளது. திருமண முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், அமெரிக்க குடிபெயர்வு அதிகாரிகள் தீவிரமாக சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் பைடன் ஆட்சி காலத்தில் அமெரிக்க குடிமகனை திருமணம் செய்தவர்களை சில நிமிடங்கள் மட்டும் நேர்காணல் செய்து அவர்களுக்கு Green Card உட்பட பல சலுகைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இப்பொழுது சில அணுகுமுறைகள் குறைக்கப்பட்டுள்ளன. டிரம்ப் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த கடுமையான விதிமுறைகள் திருமண தம்பதிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
குடிபெயர்வு வழக்கறிஞர் அஸ்வின் சர்மா கூறும்போது, “அதிகாரிகள் இப்போது மேலதிக விசாரணைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் தங்கள் அதிகாரத்தை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். திருமணங்கள் உண்மையானவையா என்பதை உறுதி செய்வதில் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். ஆதாரங்கள் பல முறை சோதிக்கப்படுகின்றன.
Green Cardக்கு விண்ணப்பிக்கும் வாழ்க்கை துணை வெளிநாட்டில் உதாரணமாக இந்தியாவில் இருந்தால், அமெரிக்க தூதரகத்தில் நேர்காணல் நடத்தப்படுகிறது. ஆனால், ஏற்கனவே அமெரிக்காவில் ஹெச்-1பி (H-1B) போன்ற தற்காலிக விசாவில் உள்ளவர்களால் “adjustment of status” என்ற செயல்முறை மூலம் விண்ணப்பிக்கப்படுகிறது. அவர்களுக்கு USCIS (United States Citizenship and Immigration Services) நேர்காணலை நடத்துகிறது.
குடிபெயர்வு வக்கீல்கள், விண்ணப்பதாரர்கள் விரிவான கேள்விகளுக்கு தயார் இருக்க வேண்டும் என்றும், அனைத்து தேவையான ஆவணங்களும் முறையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
இந்நிலையில், திருமண அடிப்படையிலான Green Card விண்ணப்பங்கள் உண்மையானவையாக இருந்தாலும் கூட இப்போது அதிகமாக சோதனைக்குட்படுத்தப்படுவதால், விண்ணப்பதாரர்கள் மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.