அம்பானி முதல் நயன்தாரா வரை: ஆடம்பர திருமணத்தால் கடனில் சிக்கும் நடுத்தர வர்க்கத்தினர்..

  அம்பானி முதல் நயன்தாரா வரை கோடியில் செலவு செய்து திருமணம் செய்பவர்களை பார்த்து, தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் தங்களால் முடிந்த அளவு ஆடம்பரமாக திருமணம் செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள். இதனால், கடன்…

marriage

 

அம்பானி முதல் நயன்தாரா வரை கோடியில் செலவு செய்து திருமணம் செய்பவர்களை பார்த்து, தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் தங்களால் முடிந்த அளவு ஆடம்பரமாக திருமணம் செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள். இதனால், கடன் வாங்கி திருமணம் செய்து பின்னர் தங்களுடைய சந்தோஷமான வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்கிறனர் என்று கூறப்படுகிறது.

அம்பானியின் திருமணம் ரூ.5000 கோடி செலவில் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதேபோன்று நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் உள்பட பலரும் கோடி கணக்கில் செலவு செய்து திருமணம் செய்கின்றனர். இந்த திருமணத்தை டிவியில் மற்றும் சமூக ஊடகங்களில் பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினரும், தங்கள் சக்திக்கு ஏற்றவாறு ஆடம்பரமாக திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணி, கடன் வாங்கி திருமணம் செய்வதாக கூறப்படுகிறது.

திருமணம் செய்ததற்காகவே தற்போது கடன் கொடுக்கும் நிறுவனங்களும் தொடங்கிவிட்டது. இதன் மூலம் எளிதாக பர்சனல் லோன் உள்பட பல வகையான கடன்கள் கிடைக்கின்றன. இதனால், கடன் வாங்கி திருமணத்தை ஆடம்பரமாக செய்யும் நிலையில், திருமணத்திற்கு பின்னர் அந்த கடனை அடைப்பதற்காகவே தம்பதிகள் ஓட வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால், அவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

எனவே, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களது சக்திக்கு தகுந்தவாறு கடன் வாங்காமல், இருக்கும் பணத்தை வைத்து எளிமையாக திருமணம் நடத்தி, பின்னர் சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஒரே ஒரு முறை திருமணம் செய்கிறோம் என்று ஆடம்பரமாக செலவு செய்யாமல், திருமணத்திற்கு பின்பு அமைதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை வைத்து திருமண செலவுகளை திட்டமிட வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகின்றது.