1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்! அதிரடி அறிவிப்பு..!

Published:

புதுவை மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் உள்ள மாணவ மாணவிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுவை மாநிலத்தில்  சமீபத்தில் 10ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்தன என்பதும் அதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாணவர்கள் அடுத்த மாதம் தங்கள் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் புதுவை அரசு அதிரடி அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளது. அதன்படி புதுவையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் எத்தனை மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் தேர்வு எழுதி இருந்தாலே அவர்கள் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஒன்பதாம் வகுப்பில் 35 மதிப்பெண்கள் பெற்று இருந்தால் மாணவர்கள் தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலை மே எட்டாம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு புதுவை மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு 11 ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற்றுள்ளதால் அது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இருப்பினும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் ஆல் பாஸ் என்ற அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது. புதுவையை தொடர்ந்து தமிழகத்திலும் இதே போன்ற அறிவிப்பு வெளிவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் ஏற்பட்டிருந்த நிலையில் தமிழகம் புதுவை உட்பட பல மாநிலங்களில் மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்பட்டனர் என்பதும் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டனர் என்பதும் அது மட்டும் இன்றி கல்லூரி மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...