மத்திய அரசுகள் மற்றும் மாநில அரசுகள் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவருக்கும் பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் வேலை இல்லா இளைஞர்களுக்கு தமிழக அரசு தரும் உதவி தொகை திட்டமும் ஒன்றாகும். இதில் யார் பயன்பெறலாம் என்ற விவரங்களை பற்றி இனி காண்போம்.
பத்தாம் வகுப்பு 12 ஆம் வகுப்பு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்களும் மாற்றுத்திறனாளிகளும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பி விண்ணப்பிப்பவர்கள் எந்த ஒரு தனியார் வேலையில் இருந்து சம்பளம் பெறுபவராக இருக்கக் கூடாது மற்றும் சுய தொழில் செய்பவராக இருக்கக் கூடாது. மாற்றுதிறனாளிகளுக்கு வயது உச்சவரம்பு 45 மற்றவர்களுக்கு 40 ஆகும்.
இந்த திட்டத்தின் மூலம் பத்தாம் வகுப்பு பெயில் ஆனவர்களுக்கு ரூபாய் 200 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ 300 12ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ 400 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ 600 கிடைக்கும். இதே மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி 400 ரூபாய் 12ஆம் வகுப்பு தேர்ச்சி 600 ரூபாய் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 750 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை தரப்படுகிறது.
விண்ணப்பிப்பவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்களை முறையாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். நீங்கள் விண்ணப்பிக்கும் போது உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் தகுதியானவர்கள் என்ற பட்சத்தில் உங்களுக்கு இந்த உதவி தொகை மிக எளிமையாக கிடைக்கும்.