திடீரென 46% வரை உயர்ந்த விமான கட்டணம்.. பயணிகள் அதிர்ச்சி..!

By Bala Siva

Published:

ஆகஸ்ட் 15 சுதந்திர தின விடுமுறை மற்றும் ஆகஸ்ட் 19 ரக்ஷாபந்தன் விடுமுறையை அடுத்து திடீரென விமான நிறுவனங்கள் இந்த தேதிகளில் விமான கட்டணத்தை 7 சதவீதம் முதல் 46 சதவீதம் வரை உயர்த்தி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடுமுறை காலங்களில் விமான பயணிகள் அதிகம் வரும் நிலையில் திடீரென விமான நிறுவனங்கள் விமான கட்டணத்தை உயர்த்தி வருவதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டு வருகிறாது.  சமீபத்தில் கூட திமுக எம்பி ஆநிதி மாறன் இது குறித்து பாராளுமன்றத்தில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் ஆகஸ்ட் 19 ரக்ஷாபந்தன் தினம் வருவதால் நீண்ட இடைவேளையை கணக்கில் கொண்டு ஏராளமானோர் விமானத்தில் டிக்கெட்டுகளை புக் செய்தனர். இந்த நிலையில் திடீரென விமான நிறுவனங்கள் 46 சதவீதம் வரை விமான கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எந்தெந்த நகரங்களுக்கு இடையே எவ்வளவு கட்டணம் உயர்வு என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
பெங்களூரு – கொச்சி: பழைய கட்டணம் ரூ.2,355 புதிய கட்டணம் ரூ.3,446 உயர்வு 46.3%
பெங்களூரு மும்பை:  பழைய கட்டணம் ரூ. 2,884புதிய கட்டணம் ரூ. 3,969 உயர்வு 37.6%
டெல்லி கோவா: பழைய கட்டணம் ரூ. 4,840 புதிய கட்டணம் ரூ. 6,641 உயர்வு 37.2%
டெல்லி புனே:  பழைய கட்டணம் ரூ. 4,289 புதிய கட்டணம் ரூ. 5,257 உயர்வு 22.6%
பெங்களூரு – ஐதராபாத்: பழைய கட்டணம் ரூ. 2,616 புதிய கட்டணம் ரூ. 3,063 உயர்வு 17.1%
மும்பை – ஐதராபாத்: பழைய கட்டணம் ரூ. 3,203 புதிய கட்டணம் ரூ. 3,508 உயர்வு 9.5%
மும்பை – கொச்சி: பழைய கட்டணம் ரூ. 4,269 புதிய கட்டணம் ரூ. 4,511 உயர்வு 5.7%