இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள சில நகரங்களுக்கு விமானங்களை இண்டிகோ மற்றும் ஏர் இண்டியா இன்று அதாவது மே 13ஆம் தேதி ரத்து செய்துள்ளன. இதில் ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், சந்தீகர், லே மற்றும் ராஜ்கோட் உள்ளிட்ட நகரங்கள் அடங்கும்.
இந்த நடவடிக்கை, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக விமான பாதையில் விதிக்கப்பட்ட தடைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் எல்லைப் பகுதிகளில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நகரங்கள் குறித்து ஏர் இந்தியா மற்றும் இண்ட்கோ வெளியிட்ட அறிக்கை குறித்து பார்ப்போம்,.
ஏர் இண்டியா: ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சந்தீகர் மற்றும் ராஜ்கோட் நகரங்களுக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சமீபத்திய நிலையை கருத்தில் கொண்டு, பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மே 13, செவ்வாய்க்கிழமை அன்று மேற்கண்ட நகரங்களுக்கு செல்கின்ற மற்றும் வருகை தரும் எங்கள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம் என தெரிவித்துள்ளது.
இண்டிகோ: ஜம்மு, அமிர்தசரஸ், சந்தீகர், லே, ஸ்ரீநகர் மற்றும் ராஜ்கோட் நகரங்களுக்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள் பயணிகள் பயணத் திட்டங்களை பாதிக்கக்கூடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்களுக்கு ஏற்பட்ட தடங்களுக்கு வருந்துகிறோம். நிலையை நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கிறோம், மேலும் புதிய தகவல் இருந்தால் உடனுக்குடன் வழங்கப்படும்,” என தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் அந்த விமான நிலையங்களின் விவரங்கள் இதோ:
அதாம்பூர், அம்பாலா, அவந்திபூர், பதிந்தா, பிகாநேர், ஹல்வாரா, ஹிண்டான், ஜெய்சல்மீர், ஜாம்நகர், கண்ட்லா, காங்கிரா, கேஷோட், கிஷன்கர், குல்லு-மணாலி, லூதியானா, முண்ட்ரா, நலியா, பாதான்கோட், பதியாலா, போர்பந்தர், சார்சாவா, ஷிம்லா, தோய்ஸ், உத்தர்லை ஆகியவை அடங்கும்.