டிராபிக் விதிகளை மீறுபவர்களை கண்டுபிடிக்க பல்வேறு டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது ஏஐ டெக்னாலஜி மூலம் டிராபிக் விதிகளை மீறுபவர்களை கண்டுபிடித்து அடுத்த நிமிடமே அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஏஐ டெக்னாலஜி என்பது தான் அடுத்த தலைமுறைக்கு டெக்னாலஜி என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் இந்த ஏஐ டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை தெரிந்தது. இந்த நிலையில் மும்பை – புனே எக்ஸ்பிரஸ் சாலையில் தற்போது ஏஐ மூலம் சாலை விதிகளை மீறுபவர்களை கண்டுபிடித்து உடனுக்குடன் அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சாலையில் 200க்கும் அதிகமான ஏஐ டெக்னாலஜி வசதி கொண்ட கேமராக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கேமராக்கள் மும்பை – புனே எக்ஸ்பிரஸ் சாலை வழியாக செல்லும் வாகனங்களை கண்காணிக்கும் என்றும் எந்த வாகன ஓட்டியாவது சாலை விதிகளை மீறினால் உடனே அந்த வாகனத்தை கண்டுபிடித்து அந்த வாகன எண்ணின் மூலம் அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு அபராத சலானை அடுத்த நிமிடமே அனுப்பி விடும் என்று கூறப்படுகிறது .
சாலை விதிகளை மீறுபவர்களை 100% துல்லியமாக இந்த ஏஐ டெக்னாலஜி கேமரா கண்டுபிடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சாலையில் சமீபத்தில் விபத்துக்கள் அதிகரித்து வருவதன் காரணமாகவே சாலை விதிகளை மீறுபவர்களை கண்டுபிடிப்பதற்காக இந்த ஏஐ டெக்னாலஜி கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த சாலையில் விதிகளை மீறுவது குறையும் என்றும் விபத்துகளும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஐ டெக்னாலஜி மூலம் செயல்படும் கேமராக்களை நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள முக்கிய சாலைகளில் பொருத்தும் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில் ஏஐ டெக்னாலஜியுடன் கூடிய கேமராக்கள் வாகனங்களை கண்காணிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.