Text எழுதினால் போதும்.. இமேஜ் கிடைத்துவிடும்.. AI டெக்னாலஜியின் ஆச்சரியங்கள்..!

By Bala Siva

Published:

AI டெக்னாலஜி மூலம் பல்வேறு ஆச்சரியமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது எந்த மாதிரியான இமேஜ் வேண்டும் என்று Text எழுதினால் அதை அப்படியே இமேஜாக AI டெக்னாலஜி கொண்டு வரும் அம்சம் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

AI டெக்னாலஜி அறிமுகமான பின்னர் பல பணிகள் எளிதாகி விட்டன என்பதும் இதன் காரணமாக வேலை இழப்பு ஏற்பட்டாலும் பணிகள் எளிமையாகவும் விரைவாகவும் முடிகிறது என்பதால் தான் AI டெக்னாலஜியை கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படம் வரைய வேண்டும் என்றால் போட்டோஷாப்பில் விழுந்து விழுந்து வரைய வேண்டிய அவசியம் இல்லாத நிலையை AI டெக்னாலஜி ஏற்படுத்தி உள்ளது.

FLUX.1 என்ற புதிய இணையதளம் இதற்காக AI டெக்னாலஜி மூலம் படம் வரையும் அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இதில் நமக்கு எந்த மாதிரியான இமேஜ் வேண்டும் என்பதை Textல் எழுதினால் போதும், அதுவே AI டெக்னாலஜி மூலம் வரைந்து கொடுத்து இருக்கிறது. எனவே நம்முடைய பணி ஒரு சில நொடிகளில் முடிந்து விடுகிறது என்பது ஆச்சரியத்தக்க ஒரு அம்சமாகும்.